ஐந்தே நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸிற்க்கு ஏற்ற சுவையான வெங்காய சாதத்தை இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள். ஒரு பருக்கை சாதம் கூட மீதி இல்லாமல் அனைத்தும் காலியாகிவிடும்

onion-rice
- Advertisement -

இனி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துவிட்டன. ஒவ்வொரு நாள் காலையிலும் இனி அடுப்படியில் அதிரடியான வேலைகள் இருக்கும். அதிலும் காலை நேரத்தில் காலை உணவு, மதிய உணவு, டீ, காபி இவை அனைத்தையும் ஒன்றாக செய்யவேண்டியிருக்கும். எனவே வீட்டு பெண்மணிகளுக்கு இன்மேல் வேலை அதிகமாகி விட்டது. அப்படி ஒவ்வொரு நாளும் சரியான நேரத்திற்கு, ருசியான உணவுகளை செய்து அனைவருக்கும் கட்டிக்கொடுத்து, அனுப்பி வைத்த பிறகு தான் அவர்களின் அன்றைய நாள் அமைதியாக இருக்கும். ஆனால் என்றாவது ஒருநாள் காலையில் தாமதமாக எழுந்து விட்டால் அவசர அவசரமாக உணவு சமைக்க முடியாமல் போகும். எனவே இந்த சிம்பிளான உணவை அன்று ஒருநாள் செய்து கொடுங்கள், உங்கள் வேலை சட்டென முடியும். வாருங்கள் அதற்கு ஏற்ற இந்த வெங்காய சாதத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப், வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சாதம் வடித்து 2 கப் சாதத்தை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்று வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு அதே போல் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி தலை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் வடித்து வைத்துள்ள 2 கப் சாதத்தை இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். 5 நிமிடத்திற்கு அடுப்பை சிம்மில் வைத்து சாதத்தைக் கலந்து விட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெங்காய சாதம் தயாராகிவிடும்.

- Advertisement -