இதை மட்டும் செய்தால் சீக்கிரம் வேலை கிடைக்கும் தெரியுமா?

lemon

உழைப்பு மனித குலத்திற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வரமாகும். உழைப்பினால் தான் இந்த உலகம் உயர்கிறது. நேர்மையான வழியில் பொருள் ஈட்ட நினைப்பவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதைக் குறித்து பெருமைப்பட வேண்டும். ஆனால் தற்காலங்களில் மக்கள் தொகை பெருக்கத்தாலும், அதிகம் கல்வி கற்றவர்களினாலும் சாதாரணமான வேலைகள் ஒருவருக்கு கிடைப்பதற்கு கூட கடும் போட்டி நிலவுகிறது. அதே நேரம் முழுமையான கல்வித்தகுதி மற்றும் பணித்திறன் இருந்தாலும் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் தட்டிப் போகிறது. இத்தகையவர்கள் கூடிய விரைவில் வேலைகள் கிடைக்கப் பெற செய்ய வேண்டிய பரிகார முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Govt job

வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஈட்டுவதற்கு ஒருவருக்கு வேலை கிடைக்க அவர்களின் குல தெய்வத்தின் அருளும், லட்சுமி தேவியின் கடாட்சமும் இருக்க வேண்டும். வேலை கிடைக்காமல் தவிர்ப்பவர்களுக்கு அவர்களின் பூர்வ ஜென்ம கர்ம வினை மற்றும் தீய சக்திகளின் பாதிப்பு காரணமாகவும் வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதம், தடைகள் ஏற்படுகின்றன. இத்தகையவர்கள் கீழ்க்கண்ட எளிய பரிகார முறைகளை செய்து வாழ்வில் அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க பெறலாம்.

காலையில் எழுந்து குளித்து முடித்ததும், சிறிது கல் உப்பைத் உங்கள் வலது கையில் எடுத்துக் கொண்டு உங்கள் தலையை வலப்புறமாக அந்த உப்பைக் கொண்டு 24 முறை சுற்றி, பின் அந்த உப்பை உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே போட்டு விட வேண்டும். பிறகு மீண்டும் சிறிது கல் உப்பை எடுத்து ஒரு தூய்மையான வெள்ளை நிற காகிதத்தில் போட்டு மடித்து, உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பை போன்றவற்றில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை ஒரே ஒருமுறை மட்டும் செய்ய வேண்டும். உங்களுக்கு வேலை கிடைத்ததும் இந்த காகிதத்தில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் கல்லுப்பை தூக்கி எறிந்து விட வேண்டும்.

elumichai-palam

புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு, 13 முறை உங்கள் தலையை சுற்றி, அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி கொண்டு, நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெட்டப்பட்ட எலுமிச்சை பழத்தின் துண்டுகளை திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளிலும் வீசி விட வேண்டும். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் அதே நேரத்தில் தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்ய வேண்டும். இந்த எலுமிச்சம் பழம் பரிகாரம் வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களுக்கு வேலை கிடைப்பதில் எதிர்மறை சக்திகளால் ஏற்படும் தடைகள், தாமதங்கள் போன்றவற்றை நீக்கும்.

இதையும் படிக்கலாமே:
இதை வீட்டில் வைத்தால் பணக்கஷ்டமே இருக்காது

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Simple pariharam for job in Tamil. It is also called as Velai kidaika in Tamil or Elumichai pariharam in Tamil or Uppu pariharangal in Tamil or Velai kidaikka eliya pariharam in Tamil.