பருப்பு பொடி என்றால் அது நீங்க அரைக்கும் பொடி தான், அப்படின்னு உங்க ஊரே பேசும். பர்ஃபெக்ட் பருப்பு பொடி அரைக்க ரகசிய டிப்ஸ் இது.

paruppu-podi_tamil
- Advertisement -

பருப்பு பொடி. பெரும்பாலும் இது எல்லோர் வீட்டிலும் அரைப்பது தான். ஆனால் ஒவ்வொரு வீட்டில் அரைக்க கூடிய பருப்பு பொடிக்கும் ருசி வித்தியாசப்படும். இன்று நாம் பார்க்க போகும் பருப்பு பொடியும் ஒரு வித்தியாசமான பருப்பு பொடி தான். பின் சொல்லக்கூடிய அளவுகளை பின்பற்றி, பின் சொல்ல கூடிய சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றி ஒருமுறை பருப்பு பொடி அரைத்து சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்திற்கு இந்த பருப்பு பொடியும், ஒரு ஸ்பூன் நெய்யும் இருந்தால் போதும். ஆஹா சாதம் உள்ளே இறங்குவது தெரியாது. தொட்டுக்கொள்ள பக்கத்தில் வாழைக்காய் வறுவல், உருளைக்கிழங்கு வருவல். இப்படி ஏதாவது ஒரு வருவல் சைடிஷ். சொல்லும் போதே நாக்கு உறுதல்லவா. வாங்க ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை 

இந்த பொடி அரைக்க சரியான அளவுகளில் பொருட்களை பார்த்து விடுவோம். துவரம் பருப்பு 3/4 கப், பாசிப்பருப்பு 1/2 கப், உளுந்து 1/4 கப், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 1/2 ஸ்பூன், வர மிளகாய் 10 லிருந்து 15, கருவேப்பிலை 2 கொத்து, பூண்டு 6 பல், உப்பு தேவையான அளவு, தேவையான பொருட்கள் இவ்வளவுதான்.

- Advertisement -

அடுப்பில் அடிகனமான ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் துவரம் பருப்பை போட்டு அது கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வறுக்க வேண்டும். ஆனால் துவரம் பருப்பு கருகிவிடக்கூடாது. வருத்த துவரம் பருப்பை ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். மீண்டும் அதில் பாசிப்பருப்பு போட்டு அதையும் பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்து தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக உளுந்து போட்டு கோல்டன் பிரவுன் கலரில் வறுத்து அதையும் எடுத்து தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள். அடுத்தபடியாக அடுப்பை அணைத்துவிட்டு அந்த கடாயில் இருக்கும் சூட்டிலேயே சீரகம், பெருங்காயத்தூள் போட்டு லேசாக வறுத்து தட்டில் கொட்டிக் கொள்ளவும். இந்த சீரகம் கருகிவிட்டால் பருப்பு பொடியின் வாசம் சுத்தமாக நன்றாக இருக்காது. கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -

அடுத்த அடுப்பை பற்ற வைத்து அதே கடாயில் வரமிளகாய் 15 போட்டு, மொறுமொறுப்பாக வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும். அடுத்து அதே கடாயில் 2 கொத்து கருவேப்பிலையை போட்டு கருவேப்பிலை மொறு மொறுப்பாக கையில் எடுத்தால் உடையும் அளவுக்கு வறுத்துக் கொள்ளுங்கள். அடுத்து பூண்டு பல் போட்டு அந்த கலாய் சூட்டிலேயே வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இப்போது வறுப்பட்ட எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு நைசான பவுடராக அரைத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், 6 மாதத்திற்கு மேலானாலும் இந்த பருப்பு பொடி கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா ரொம்பவே சிம்பிளான இந்த உருளைக்கிழங்கு பால் கறியை ஒரு முறை செஞ்சி பாருங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

ஈரப்பதம் ஈர கைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை கூட்டி குறைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பருப்பு பொடி வெறும் சுவை மட்டும் நமக்கு தரப்போவது கிடையாது. மூன்று பருப்புகளில் இருக்கக்கூடிய சத்துக்களையும் சேர்த்து கொடுக்கப் போகிறது. ஆகவே உங்களுடைய வீட்டில் பருப்பு பொடியை அரைத்து வைத்து தினமும் இதிலிருந்து ஒரு ஸ்பூன், சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடுங்கள் ருசிக்கும் குறைவில்லை. ஆரோக்கியத்திற்கும் குறைவில்லை. எளிமையான இந்த ரெசிபி பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -