சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா ரொம்பவே சிம்பிளான இந்த உருளைக்கிழங்கு பால் கறியை ஒரு முறை செஞ்சி பாருங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

potato paal curry
- Advertisement -

பொதுவாக சப்பாத்தி பூரி இதற்கெல்லாம் ஏதாவது சைடிஷ் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் காரசாரமாக செய்து சாப்பிடுவோம். அப்படியே உருளைக்கிழங்கு வைத்து ஏதாவது செய்வதாக இருந்தாலும் அது உருளைக்கிழங்கு மசாலாவாக இருக்கும் அல்லது குருமா வைப்போம். இது இரண்டும் இல்லாமல் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி வைத்து ஒரு சுவையான பால் கறியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த டிஷ் செய்வதற்கு முதலில் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மீடியம் துண்டுகளாக நறுக்கி வைத்து விடுங்கள். அதே போல் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மீடியம் சைஸ் தக்காளியும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த பால் கறிக்கு ஒரு மசாலாவை தயார் செய்து கொள்வோம். அதற்கு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், ஐந்து முந்திரிப்பருப்பு, ஒரு டீஸ்பூன் கசகசா, முக்கால் டீஸ்பூன் சோம்பு, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும் இப்பொழுது பால் கறி செய்து விடலாம்

அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு பட்டை, மூன்று கிராம்பு மட்டும் சேர்த்து பொரிந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் ஓரளவிற்கு நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து, ரெண்டு பச்சை மிளகாய் கீறி அதையும் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

இவை எல்லாம் ஓரளவிற்கு வதங்கிய பிறகு நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து தக்காளி குழைந்த பிறகு 50 கிராம் பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பிரஷ்ஷான பச்சை பட்டாணி சேர்த்து தான் செய்ய வேண்டும். அப்போது தான் சுவை நன்றாக இருக்கும். பச்சை பட்டாணி சேர்த்த பின்பு ஒரு முறை நன்றாக கலந்த பிறகு கால் கப் மட்டும் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடுங்கள் ஐந்து நிமிடத்தில் இந்த பட்டாணி நன்றாக வெந்து விடும்.

பட்டாணி வெந்த பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த உருளைக்கிழங்கையும் அரைத்து வைத்த மசாலாவையும் இதில் சேர்த்த பிறகு கால் பின்ச் கரம் மசாலா சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடுங்கள். இதோ நல்ல கமகமவென்று வாசத்துடன் உருளைக்கிழங்கு பால் கறி தயார். இதற்கு மேல் கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: எதையெதையோ வைத்து போண்டா செய்து இருப்பீர்கள். ஆனால் ஐஸ்கிரீமை வைத்து சூடாகவும் சில்லுனு போண்டா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஒருமுறை இப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்.

இந்த பால்கறி மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதில் காரத்திற்கு பச்சை மிளகாயை தவிர நாம் வேறு எதையும் சேர்க்கவில்லை. சப்பாத்தி பூரி நான் வரட்டா போன்றவற்றிற்கு இது அட்டகாசமான சைடிஷா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -