என்னதான் முயற்சி செய்தாலும் உங்களுக்கு சாம்பார் வைக்க மட்டும் வராதா? இந்த சாம்பார் பொடியை அரைச்சு வச்சுக்கோங்க. சாம்பாரை ஈசியா மணக்க மணக்க வைத்துவிடலாம்.

sambar-podi
- Advertisement -

புதுசா சமையலை கத்துக் கொள்பவர்களாக இருந்தால், உங்களுக்கு இந்த சாம்பார் பொடி ரெசிபி மிக மிக பயனுள்ளதாக இருக்கும். சில பேருக்கு என்னதான் முயற்சி செய்தாலும், இந்த சாம்பாரை மட்டும் கமகம வாசத்தோடு ருசியாக வைக்கவே தெரியாது. உங்களுக்கு சுமாராகத்தான் சாம்பார் வைக்க தெரியும் என்றாலும் பரவாயில்லை. அந்த சாம்பாரில் இரண்டு ஸ்பூன் இந்த சாம்பார் பொடியைப் போட்டு கொதிக்க வையுங்கள். சாம்பார் கமகமன்னு வாசம் வீசும். சூப்பரான சாம்பார் பொடி ரெசிபி உங்களுக்காக.

sambar-podi

முதலில் சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். நீளவாக்கில் இருக்கும் வரமிளகாய் – 750 கிராம், வர மல்லி – 1 கிலோ, கடலைப் பருப்பு – 25 கிராம், துவரம் பருப்பு – 100 கிராம், வெந்தயம் – 20 கிராம், மிளகு – 25 கிராம், சீரகம் – 50 கிராம், இட்லி அரிசி – 100 கிராம், விரலி மஞ்சள் – 5 துண்டுகள்.

- Advertisement -

சில பேர் இதில் பெருங்காய கட்டி சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் பெருங்காயம் சேர்த்து அரைத்தால் அசைவ குழம்புக்கு இந்த பொடியை நம்மால் போட முடியாது. உங்கள் இஷ்டம் தான். பெருங்காயம் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம்.

sambar-podi2

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதை நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். முதலில் கடலைப் பருப்பையும் துவரம் பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக மிளகை போட்டு, மிளகு வெடித்து வந்ததும் இதையும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி கொள்ளவேண்டும்.

- Advertisement -

அடுத்த படியாக சீரகத்தை கடாயில் கொட்டி வறுக்க வேண்டும். சீரகம், வாசம் வந்த உடனேயே பக்குவமாக அதை எடுத்து தட்டில் கொட்டி விட வேண்டும். சீரகம் வறுக்கும்போது கருகி விட்டால் சாம்பார்பொடியின் மனமே மாறிவிடும். உஷாராக வறுக்க வேண்டும் சீரகத்தை.

Seeragam

அடுத்தபடியாக இட்லி அரிசியை கடாயில் போட்டு, இட்லி அரிசி பொறிந்து லேசாக சிவந்து வந்தவுடன் இதையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே மஞ்சள் கிழங்குகளை போட்டு சூடு செய்து கொள்ளுங்கள். இதையும் தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

sambar-podi1

மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக வர மல்லியையும், வர மறையும் கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் சேர்த்து கை பொறுக்காத சூடு வரும் வரை சூடு செய்து எடுத்தால் போதும். மிளகாயின் நிறம் மாறக் கூடாது. வரமல்லிக்கும் நிறம் மாறக் கூடாது. கடாயில் கொட்டி சூடு செய்து, அந்த பொருளை தொட்டு பார்த்தால் கையில் தொடமுடியாத அளவிற்கு வரமிளகாய் வரமல்லியும் சூடாகி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

sambar-podi2

இந்த எல்லாப் பொருட்களையும் தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டு அருகில் ரைஸ்மில் இருந்தால் அங்கேயே கொடுத்து நைசாக இந்த சாம்பார் பொடியை அரைத்துக் கொண்டு வந்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால். ஒரு வருடம் ஆனாலும் இந்த சாம்பார் பொடி கெட்டுப்போகாமல் இருக்கும்.

idli-sambar3

மொத்தமாக இருக்கும் இந்த சாம்பார் பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்ய வேண்டும். தினமும் தேவைக்கு ஏற்ப கொஞ்சமாக சிறிய கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். சாம்பாருக்கு மட்டும் இந்த பொடி அல்ல. எல்லா வகையான குழம்பு ரெசிபிகளுக்கும் கூட இந்த பொடியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -