அழகான அழகை அனைவரும் பெற, ஆடம்பரமே இல்லாத இந்த 2 குறிப்பு போதும். பேரழகுக்கு உதாரணம் நீங்களாகத்தான் இருப்பீங்க.

face11
- Advertisement -

உங்கள் அழகுக்கு அழகு சேர்க்க சுலபமான முறையில் ஒரு சீரம், ஒரு ஸ்ப்ரே, எப்படி தயார் செய்வது என்ற இந்த இரண்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொஞ்சம் சிரமப்படாமல் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய சருமம் இயற்கையாகவே பொலிவான தோற்றத்தை பெறும். அதாவது செயற்கையாக மேக்கப் போட்டுத்தான் உங்களுடைய முகம் கை கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. அழகான அழகை மேக்கப் போடாமல் இயற்கையாகவே முழுமையாக பெற இந்த சுலபமான இரண்டு குறிப்புகள் போதும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

முகத்திற்கு சிம்பிள் சீரம்:
இந்த சீரம் தயாரிக்க நமக்கு 3 பொருட்கள் தேவை. ஆலோவேரா ஜெல் – 1 டேபிள் ஸ்பூன், Rosehip Oil – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன், தேவைப்படும். முதலில் ஒரு சிறிய பவுலில் ஆலோவேரா ஜெல், Rosehip Oil, இந்த இரண்டு பொருட்களை போட்டு, ஸ்பூனை வைத்து நன்றாக கலந்தால் வெள்ளை நிறத்தில் கிரீம் போல நமக்கு ஒரு ஜெல் கிடைத்திருக்கும். இதோடு ரோஸ் வாட்டர் ஊற்றி மீண்டும் ஒருமுறை ஸ்பூன் வைத்து கலந்தால் சீரம் போல ஒரு லிக்விட் கிடைத்து விடும். இதை பாட்டிலில் ஸ்டோர் செய்து அப்படியே பிரிட்ஜில் வைத்தால் 8 லிருந்து 10 நாட்கள் கெட்டுப்போகாது.

- Advertisement -

இந்த சீரமை எப்படி அப்ளை செய்வது. சீரமை இரண்டு அல்லது மூன்று சொட்டு எடுத்து உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விலர்களால் தொட்டு முகம் முழுதும் ஆங்காங்கே சிறிய சிறிய புள்ளிகளாக வைத்து மசாஜ் செய்தால் முகம் இந்த சீரமை நன்றாக இழுத்துக் கொள்ளும். அப்படியே விட்டுவிடுங்கள். முகம் கழுவ வேண்டும் என்ற அவசியம் இருக்காது. இரவு நேரத்தில் இந்த சீரமை பயன்படுத்தலாம். முகம் மட்டுமல்ல உங்களுடைய கை, கால்களுக்கு கூட இந்த சீரமை எடுத்து லேசாக தடவி அப்படியே விட்டு விடுங்கள். ஒரு சில நாட்களில் உங்களுடைய சருமம் தங்கம் போல ஜொலிக்க தொடங்கிவிடும். இரவு இந்த சீரமை சருமத்தில் போட்டுவிட்டு மறுநாள் காலை எப்போதும் போல குளித்துக் கொள்ளலாம்.

முகத்திற்கு சிம்பிள் ஸ்ப்ரே:
இந்த சீரம் தயாரிக்க நமக்கு வெறும் 2 பொருட்கள் மட்டும் போதும். ரோஸ் வாட்டர், ஆலோவேரா ஜெல். ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆலோவேரா ஜெல் 1 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1/4 கப், ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த லிக்விடை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் பத்து நாட்கள் கெட்டுப் போகாது.

- Advertisement -

காலை மாலை இரண்டு வேளை உங்களுடைய முகத்தில் இந்தப் ஸ்ப்ரே அடித்துக் கொள்ளலாம். நீண்ட தூரம் பயணம் செய்யும்போது உங்களுடைய முகம் வாட்டமாக இருக்கிறது என்றால் உடனடியாக இந்த ஸ்பிரேவை முகத்தில் அடித்துக்கொண்டு உங்கள் கைகளைக் கொண்டு லேசாக மசாஜ் செய்து, ஐந்து நிமிடம் கழித்து ஒரு காட்டன் கைகுட்டையை வைத்து முகத்தை துடைத்தாலும் முகம் இன்ஸ்டன்ட் ஆக ஃப்ரஷ் ஆக மாறும். அந்த அளவுக்கு பவர் இதில் உள்ளது.

அப்படி இல்லை என்றால் தினமும் கூட நீங்கள் இந்த ஸ்பிரேவை வீட்டில் சும்மா இருக்கும்போது முகத்தில் ஸ்பிரே செய்துவிட்டு கொள்ளுங்கள். முகம் ரிலாக்ஸ் ஆக சருமம் பொலிவாக இருக்கும். உங்களுக்கு மேலே சொன்ன இரண்டு குறிப்புகள் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உங்க அழகுக்கு மேலும் அழகு சேர்க்க ஆடம்பரம் இல்லாத குறிப்புகள் இவை.

பின்குறிப்பு: Rosehip Oil, அலோவேரா ஜெல் வாசனை திரவியம் மற்றும் கலர் சேர்க்காதது. இந்த பொருட்கள் உங்களுக்கு ஆன்லைனில் சுலபமாக கிடைக்கின்றது. அதை வாங்கிக் கொள்ளலாம். கலர் சேர்த்த பர்ஃபியும் சேர்த்த அலோவேரா ஜெல்லை அழகு குறிப்புக்கு கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது. ரோஸ் வாட்டரும் மலிவாக கிடைக்கக்கூடிய, வாசனை திரவம் கலந்த ரோஸ் வாட்டரை வாங்காதீங்க. ஆர்கானிக்காக கிடைக்கக்கூடிய பொருட்களாக பார்த்து வாங்கி குறிப்புக்கு பயன்படுத்தினால் ரிசல்ட் இரண்டு மடங்காக உடனடியாக கிடைக்கும்.

- Advertisement -