என்னங்க இந்த வீட்டு வேலை உங்களை ரொம்ப கடுப்பேத்துதா, அப்படின்னா கொஞ்சம் ஸ்மார்ட் ஒர்க் செய்து சட்டுனு வேலையை முடிச்சிட்டு ஜாலியா இருக்க வேண்டியது தானே.

- Advertisement -

பெண்களுக்கு இந்த வீட்டு வேலை என்பது முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு தொடர்கதை போல தான். வேலைக்கு செல்லும் பெண்கள் ஆவது வீட்டு வேலைக்கு என தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி செய்து அடுத்த வேலை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நாள் முழுவதும் செய்தாலும் கூட வேலைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். இனி அப்படி ஒரு வேலையை எடுத்தால் அதைச் சட்டென்று முடித்து அடுத்த வேலைக்கு செல்ல சிறு சிறு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சமையலறையின் வேலைகளை சுலபமாக செய்ய உதவுவதோடு பொருட்களை வீணாக்காமல் மிச்சப்படுத்தவும் உதவும்.

இனி வெங்காயம் அரியும் போது கத்தியில் அரை எலுமிச்சை சாறை தடவி விட்டு, அந்த பிறகு அரிந்து பாருங்கள், ஒரு கிலோ வெங்காயம் அரிந்தாலும் கண்ணில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

- Advertisement -

அகல் விளக்கில் கொஞ்சம் விளக்கெண்ணை அல்லது வேப்ப எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி இரண்டு பல், பூண்டு தோல் உரிக்காமல் தட்டி அதில் போட்டு தீபம் ஏற்றி மாலை நேரத்தில் வீட்டில் ஏற்றி வைத்தால், கொசு தொல்லை இருக்காது. ரசாயனம் கலந்த இந்த லிக்விட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த முறை பயன்படுத்தினால் கொசு தொல்லையும் இருக்காது, இதனால் நமக்கும் எந்த கெடுதலும் இல்லை. இதனால் உங்கள் பணமும் மிச்சமாகும்.

வீட்டில் பூச்சி, பல்லி, கரப்பான் பூச்சி போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்க இஞ்சி தோல் சீவிய பிறகு அந்தத் தோலை கீழே போடாமல் லேசாக தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை ஸ்பூன் அளவிற்கு ஷாம்பு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை உங்கள் வீட்டில் இந்த பூச்சி தொல்லைகள் அதிகம் உள்ள இடத்தில் கொஞ்சம் ஸ்பிரே செய்து விடுங்கள் அதன் பிறகு எந்த பூச்சியும் வராது.

- Advertisement -

வீட்டில் குளியல் சோப்பு கடைசியில் தீரும் போது கொஞ்சம் கொஞ்சமாக மீந்து விடும். இதை தூக்கி தூர போடாமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது தேவை இல்லாத சாக்ஸில் இவைகளை போட்டு வைத்துக் கொள்ளுங்கள் . ஸ்டோன் வொர்க் துணிகளை எல்லாம் வாஷிங் மிஷினில் நம்மால் போட்டு துவைக்க முடியாது, அப்படி உள்ள துணிகளில் கறைகளை இந்த சோப்பை வைத்து லேசாக தேய்த்து விட்டு பாருங்கள் கறை அனைத்தும் போய் விடும்.

குக்கரில் இருந்து பருப்பு பொங்கி கீழே ஊற்றாமல் இருக்க மூன்று விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும். ஒன்று குக்கரில் பருப்பு சேர்த்த பிறகு ஒரு சிறிய ஸ்பூனை அதில் போட்டு விடுங்கள். அதன் பிறகு குக்கரில் இருக்கும் பருப்பு தண்ணீர் கொதித்த பிறகு தான் குக்கர் மூடியை போட வேண்டும். மூன்றாவது, விசில் வழியே ஆவி வெளியான பிறகு குக்கர் வெயிட் போட்டால் பருப்பு கொஞ்சம் கூட பொங்கி வராது, ஏன் குக்கர் மூடியில் கூட ஒரு பருப்பு கூட இருக்காது அந்த அளவிற்கு சூப்பராக வெந்து இருக்கும். இதனால் குக்கர் பொங்கி வழிந்து அடுப்பை சுத்தம் செய்யும் வேலை உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.

- Advertisement -

வடை சுடும் போது எண்ணெய் குடிக்காமல் இருக்க உளுந்தை அதிக நேரம் ஊற வைக்கக் கூடாது. அதன் பிறகு அரைக்கும் போது இரண்டு, மூன்று ஐஸ்கியூபிகளை அதில் சேர்த்து அரைக்க வேண்டும் அப்போது தான் உளுந்து சூடாகி எண்ணெய் அதிகம் குடிக்காமல் இருக்கும். அதே போல் வெங்காயம், உப்பு இவை எல்லாம் சேர்த்த பிறகு மாவை நன்றாக அடித்து கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது மாவில் காற்று சேர்ந்து வடை மெதுவாகவும், எண்ணெய் குடிக்காமலும் இருக்கும்.

பிளாஸ்க் ஊற்றி வைக்கும் டீ காபி போன்றவை அதிக நேரம் சூடாக இருக்க, நீங்கள் டீ காபி ஊற்ற அரை மணி நேரத்திற்கு முன்பு நன்றாக கொதிக்கும் நீரை அதில் ஊற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த நீரை கீழே கொட்டி விட்டு டீயோ, காப்பியோ ஊற்றி வைத்தால் நீண்ட நேரம் சூட்டுடன் இருக்கும். இனி நீங்க அடிக்கடி டீ போட்டு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: தீபத்துக்கு ஏற்றிய அகல் விளக்கை எல்லாம் இப்படி செஞ்ச பிறகு எடுத்து வைங்க, அடுத்த வருஷம் எடுக்கும் போது கூட அப்படியே புதுசா வாங்கின அகல் விளக்கு மாதிரியே இருக்கும்.

இந்த குறிப்புகள் அனைத்தும் உங்கள் வீட்டு வேலையை எளிமையாக்க உதவும், இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -