இவ்வளவு ஈஸியா வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் வீட்டிலேயே செய்ய முடியுமா? லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பர் ரெசிபி உங்களுக்காக.

basmathi-fried-rice
- Advertisement -

பெரும்பாலும் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் என்று சொன்னாலே அதை நாம் கடையில் வாங்கி தான் சாப்பிடுவோம். வீட்டிலும் இந்த வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். தேவையான பொருட்களை முன்கூட்டியே வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை முன்கூட்டியே நறுக்கி வைத்துக் கொண்டாலும், காலையில் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ்சை 15 நிமிடத்தில் தாளித்து கொடுத்துவிடலாம். வெள்ளை சாதம் மட்டும் காலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

fried-rice

முதலில் பீன்ஸ் – 5, கேரட் – 1, குடை மிளகாய் – பாதி அளவு,  முட்டைகோஸ் – 50 கிராம் வெங்காயத்தாள் – 4, இந்த எல்லாப் பொருட்களையும் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி, தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை எண்ணெயோடு சேர்த்து, காய்கறிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, இந்த காய்கறிகளை எண்ணெயிலேயே வதக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறி முக்கால் பாகம் வெந்தவுடன் சோயா சாஸ் – 1 ஸ்பூன் ஊற்றி ஒரு நிமிடம் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

fried-rice

காய்கள் வெந்து இருக்க வேண்டும். ஆனால் குழையக் கூடாது. காய்கறிகள் சரியான பக்குவம் வெந்து வந்தவுடன் வடித்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி – 200 கிராம் அளவு எடுத்து கடாயில் இருக்கும் காய்கறிகளோடு சேர்த்து 1 ஸ்பூன் – மிளகுத்தூள் சேர்த்து உதிரி உதிரியாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சுலபமான ஃப்ரைட் ரைஸ் ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலும் தயாராகிவிட்டது.

- Advertisement -

பாசுமதி அரிசியில் கொஞ்சமாக உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டில் பாசுமதி அரிசி இல்லை என்றால் பச்சரிசி, சீரக சம்பா அரிசியிலும் இந்த ஃப்ரைட் ரைஸ் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

fried-rice1

உங்களுக்கு இவ்வளவு ஈசியா செய்கிற பிரைட் ரைஸ் பிடிச்சிருந்தா, உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு இந்த சாதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு டொமேட்டோ சாஸ் கொடுத்தால்கூட இதன் மேல் ஊற்றி சாப்பிடுவாங்க.

- Advertisement -