சர் C.V இராமன் வாழ்க்கை வரலாறு

Raman
- Advertisement -

தமிழகத்தினை சேர்ந்த அறிவியல் அறிஞர் சர் ச.வெ இராமன். இவர் ஒளி ஒரு பொருளின் வழியே ஊடுருவி சென்றால் ஒளிச்சிதறல் ஏற்படும் என்பதை கண்டறிந்தார் இது “இராமன் விளைவு” என்றழைக்கப்படுகிறது. இந்த ஒளிச்சிதறல் படைப்பிற்காக 1930ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.

raman-1

சர் ச.வெ இராமன் அவர்களுடைய முழுமையான பெயர் சந்திரசேகர வெங்கடஇராமன் ஆகும். இவரது வாழ்க்கை வரலாற்றினை பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள உள்ளோம்.

- Advertisement -

சர் ச.வெ இராமன் பிறப்பு :

சர் ச.வெ இராமன் அவர்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888ஆம் ஆண்டு சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா என்கிற தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.

பெயர் – சந்திரசேகர வெங்கடராமன்
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – நவம்பர் 7, 1888
பெற்றோர் – சந்திரசேகர ஐயர் மற்றும் பார்வதி அம்மா
பிறந்த இடம் – திருச்சிராப்பள்ளி [தமிழ்நாடு]

- Advertisement -

சர் ச.வெ இராமன் கல்வி மற்றும் படிப்பு :

சர் ச.வெ இராமன் அவருடைய ஆரம்பகால பள்ளிப்படிப்பை விசாகப்பட்டினத்தில் படித்தார். அதன் காரணம் யாதெனில் அவருடைய தந்தை சந்திரசேகர ஐயர் விசாகபட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அங்கேயே சர் ச.வெ இராமன் அவர்களும் தனது பள்ளி படிப்பினை முடித்தார்.

- Advertisement -

பிறகு 1904 ஆம் ஆண்டு தனது இளங்கலை அறிவியல் படிப்பினை சென்னை மாநில கல்லூரியில் பயின்றார். அதனையும் நன்றாக பயின்ற அவர் அதே கல்லூரியில் தனது முதுகலை பட்டத்தினையும் 1907ஆம் ஆண்டு முடித்தார். கல்வியில் சிறந்த மாணவராகவே அவர் எப்போதும் திகழ்ந்தார்.

raman-2

சர் ச.வெ இராமன் பணி மற்றும் ஆசை :

முதுகலை பட்டம் பெற்றதும் இவருக்கு அவரது துறை சார்ந்த அறிவியல் சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கவில்லை என்றதும் வேறு ஏதாவது வரும் வேலையினை செய்யலாம் என்று முடிவெடுத்த அவர் கொல்கத்தாவில் கணக்குத்துறையில் கணக்காயராக தனது பணியினை துவங்கினார்.

அவர் பணியினை தொடர்ந்து செய்து வந்தாலும் அவருக்கு அறிவியல் அறிஞர் ஆகவேண்டும் என்பதே அவருடைய ஆசை இதனால் தனது பணியினை தொடர்ந்து கொண்டே சர் ச.வெ இராமன் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் ஆய்வு கழகத்தில் தனது ஒளிச்சிதறல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

raman-3

இப்படியே அவர் கொல்கத்தாவில் 15 ஆண்டுகள் அவர் இருந்தார். பிறகு அங்கிருந்து பெங்களூரு வந்து 15 வருடம் இருந்தார். அதன் பிறகு அவரால் நிறுவப்பட்ட இராமன் ஆய்வு கழகத்தில் இயக்குனராக கடைசி வரை பணியாற்றினார்.

நோபல் பரிசு :

இயற்பியலில் துறையில் இவருக்கான நோபல் பரிசு அறிவிக்கட்பட்டது. இந்திய இயற்பியல் ஆய்விதழில் “ஒரு புதிய ஒளிர்பாடு” எனும் தலைப்பில் பிப்ரவரி 28, 1928 ஆம் ஆண்டு தன் ஆய்வுமுடிவுகளை ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து வெளியிட்டார். இந்த ஆய்வு முடிவுகளே இராமன் விளைவு என்றழைக்கப்பட்டது. பிறகு இந்த படைப்பிற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

raman-4

சர் ச.வெ இராமன் இறப்பு :

சர் ச.வெ இராமன் அவர்கள் நவம்பர் 21, 1970 ஆம் ஆண்டு இறந்தார். அவர் இறக்கும் வரை அவர் தனது பெங்களூரு ஆய்வகத்தின் இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சர் ச.வெ இராமன் பெற்ற சிறப்புகள் :

பிரிட்டிஷ் அரசு இவரின் ஆய்வுத்திறனை பாராட்டி இவருக்கு “நைட் ஹுட்” என்ற பட்டத்தினை 1929ஆம் ஆண்டு வழங்கியது.

இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” இவருக்கு 1954ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

English Overview:
Here we have Sir CV Raman biography in Tamil. Above we have Sir CV Raman history in Tamil. We can also say it as Sir CV Raman varalaru in Tamil or Sir CV Raman essay in Tamil or Sir CV Raman Katturai in Tamil.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை வரலாறு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -