டாக்டர் ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை வரலாறு

Rajenthira-Prasath
- Advertisement -

டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆளுமையின் உருவமாக கருதப்பட்டவர். சுதந்திரம் அடைந்த பின் இந்திய அரசியல் சாசனத்தை தொகுத்த குழுவில் முக்கிய பங்கினை ஆற்றியவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. இவர் ஒரு மிகச்சிறந்த ஆளுநர், அரசியல்வாதி என்பதனையும் தாண்டி இவர் ஒரு மிக சிறந்த போராளி என்றே கூறலாம். ஆம் இந்திய சுதந்திர போராட்டத்தில் இவரது பங்கு என்பது முற்றிலும் பாராட்டத்தக்கதாக அமைந்தது.

rajenthira prasath 1d

இதுபோன்று எண்ணற்ற திறன்களை தன்வசம் வைத்துள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் பற்றிய தொகுப்பினை இந்த பதிவில் விவரித்துள்ளோம். அவரது வாழ்க்கை குறிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து கீழே படிக்கவும்.

- Advertisement -

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறப்பு:

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டத்தில் செராடெ
எனும் கிராமத்தில் டிசம்பர் 3 1884 ஆம் ஆண்டு மகாவீர சாகி மற்றும் காமலேசுவரி என்ற தம்பதிக்கு மகனாய் பிறந்தார். சிறுவயதில் தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களால் “ராஜன்” என்று அழைக்கப்பட்டார்.

பெயர் – ராஜேந்திர பிரசாத்
பிறந்த தேதி மற்றும் வருடம் – டிசம்பர் 3 1884 [ 03-12-1884 ]
பெற்றோர் – மகாவீர சாகி, காமலேசுவரி
பிறந்த இடம் – செராடெ [ பீகார் மாநிலம் ]
வசித்த இடம் -பாட்னா

- Advertisement -

டாக்டர் ராஜேந்திர பிரசாத் திருமணம்:

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனது 12ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்கிற பெண்ணை மணந்தார். பிறகு சிறப்பான இல்லற வாழ்க்கையினை மேற்கொண்டார்.

- Advertisement -

rajenthira prasath 2 d

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி மற்றும் படிப்பு:

ராஜேந்திர பிரசாத் தனது தொடக்ககல்வியினை சாப்ரா என்கிற மாவட்டத்தில் படித்து முடித்தார். இவரது பெற்றோர்கள் ராஜேந்திர பிரசாத் குழந்தையாக இருக்கும் போதே பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் போன்றவற்றிற்கு தனித்தனியே ஆசியர்களை ஏற்பாடு செய்து அவருக்கு படிக்க ஏற்பாடுகளை செய்தார்.

1907 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி கல்லூரி [Presidency College] இளங்கலை பொருளியல் பிரிவினை தேர்ந்தெடுத்து படித்த அவர் பிறகு முதுகலை படிப்பிலும் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

பிறகு பல கல்லூரிகளில் பேராசிரியராகவும் மற்றும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். அவ்வாறு பணியாற்றி கொண்டிருக்கும் போதே அவர் சட்ட படிப்பினை மேற்கொண்டு தங்கப்பதக்கத்துடன் முதல் மாணவராக தேர்ச்சி அடைந்தார். பிறகு சட்ட படிப்பு துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

rajenthira prasath 4

சுதந்திர போராட்டத்தில் ராஜரேந்திர பிரசாத்தின் பங்கு:

சட்ட படிப்பில் முனைவர் பட்டம் பெற்றதை அடுத்து அவர் வழக்கறிஞர் பதவி ஏற்று பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார். அவரது வாதத்திறமை அவரை ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் சொற்பொழிவாளராக மாற்றியது. பிறகு அவர் மக்களுக்காக தனது குரலினை கொடுக்க ஆரம்பித்தார்.

பிறகு சிறிது காலம் கழித்து காந்திஅடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழி பின்பற்றி தான் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் பதவியினை துறந்து காந்தி அடிகளின் ” ஒத்துழையாமை இயக்கம்” என்ற இயக்கத்தில் தன்னை இணைத்து கொணடார்.

அதன்பிறகு பல போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் மக்களுக்காக தனது குரலினை உயர்த்தினார். பிறகு 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கைதானவர்களில் ராஜரேந்திர பிரசாத்தும் ஒருவர் ஆவார். மூன்று ஆண்டுகள் கழித்து 1945ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்து விடுவிக்கபட்டார்.

rajenthira prasath 3 d

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் :

1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் அரசியல் அமைப்பு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியல் அமைப்பு குழுவில் தனது சிறப்பான பங்கினை அளித்தார். மேலும் 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் “முதல் குடியரசு தலைவராக” பதவியேற்றார்.

1952 மற்றும் 1957ஆம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் ஒருவர் மட்டுமே இன்றுவரை இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்துள்ளார். 1962ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு இந்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது அளித்து சிறப்பித்தது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இறப்பு:

ஓய்வு பெற்ற சில மாதங்களிலே அவரது உடல் உடல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து நோய்வாய் பட்டார். பிறகு பிப்ரவரி 28 1963ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். சிறந்த ஆளுமை திறனை தன்வசம் வைத்திருந்த அவரை இழந்ததால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ராஜேந்திர பிரசாத் இறந்த ஆண்டு – 1963

English Overview:
Here we have Dr Rajenthira prasath biography in Tamil. Dr. Rajenthira prasath is a great Leader who lived in Bihar, India. Rajenthira prasath is also the first president of Republic India. Above we have Dr Rajenthira prasath history in Tamil. We cn also call it as Dr Rajenthira prasath Varalaru in Tamil or Dr Rajenthira prasath essay in Tamil or katturai in Tamil.

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -