ஜோதிடம் : இந்தாண்டு இந்த ராசியினருக்கு ஏற்படவிருக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

12-rasi

புதிய ஆண்டான 2019 ஆம் ஆண்டு பிறந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. அனைத்து ராசியினருக்கும் ஆண்டின் தொடக்கம் முதலே சில நன்மையான பலன்கள் ஏற்பட்டிருக்கும். ஆனாலும் நன்மையான பலன் என்றால் நம் அனைவரின் மனதில் முதலில் தோன்றுவது பணம் அல்லது பொருளாதார ரீதியிலான லாபம். இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் எந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியில் மிகுதியான பலன்களை பெறுவார்கள் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

கடகம்

Mesham Rasi

கடக ராசியினருக்கு 2019 ஆம் ஆண்டு முழுவதும் குரு பகவான் இந்த ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் உடல்நலம் சிறப்பாக இருப்பதோடு, இவர்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறந்த பலன்கள் ஏற்படும். குருவின் இந்த அமைப்பால் எளிதில் சோர்வடையாமல் எடுத்துக்கொண்ட காரியங்களில் கடினமாக உழைத்து பொருள், புகழ் போன்றவற்றை ஈட்டுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள். புதிய வேலை தேடும் இந்த ராசியினர் பலருக்கு அவர்களின் தகுதிக்கேற்ற, அதிக ஊதியம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். பல லட்சம், கோடி ருபாய் மதிப்புள்ள தொழில், வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர்கள். நீங்கள் உங்கள் வேலை, தொழில்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால் மேலும் பல நன்மையான பலன்களை பெறலாம்.

கும்பம்

Kumbam Rasi

- Advertisement -

கும்பம் ராசியினருக்கு 11 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் குரு கும்ப ராசியினருக்கு புதிய நண்பர்களை அறிமுகம் செய்வார். இதனால் இந்த ராசியினருக்கு பொருளாதார ரீதியிலான அனுகூலங்கள் உண்டாகும். மேலும் தொழில்,வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசியினர் தங்களின் பேச்சு திறமையால் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்து, பல மடங்கு லாபங்களை பெற கூடிய தொழில், வியாபார ஒப்பந்தங்கள் பெறும் அமைப்பு உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருப்பதால் கடினமாக உழைத்து உங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களுடன் நீண்ட கால தொழில்,வியாபார உறவுகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள்.

மீனம்

Meenam Rasi

மீனம் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். உங்களின் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் இந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டாக அமைய போகிறது. உங்களின் தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் வேலையில் மிகுந்த உற்சாகத்துடன் செய்து உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராமலேயே உங்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடும். உங்களுக்கு சக ஊழியர்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். போட்டிகளை கண்டு அஞ்சாமல் தைரியமாக களத்தில் இறங்கி உழைத்தால் வெற்றி உங்களுக்கு தான். உங்களின் மீது நம்பிக்கை கொண்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் மிக சிறப்பான வெற்றிகளை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகி, பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
நீங்கள் எந்த ராசியினரிடம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasigal yogam 2019 in Tamil. It is also called 12 rasigal in Tamil or Rasi palan in Tamil or Aandu rasi palan in Tamil or Rasigal palangal in Tamil.