சிறியாநங்கையின் பயன்கள்

siriyanangai

சிறியாநங்கை கசப்புத்தன்மை கொண்ட ஒரு மூலிகை. நீர் பாங்கான இடங்களிலும், வயல்வெளிகளிலும் செழுமையாக வளரக்கூடியது இந்த மூலிகை. இந்த சிறியாநங்கையானது விஷத்தை முறிக்கும் தன்மையைக் கொண்டது. அந்த காலத்தில் வேடர்கள் வேட்டையாடச் செல்லும் போது, சிறியாநங்கை செடியின் வடக்கு பக்கம் உள்ள வேர்ப்பகுதியை அவர்களின் வாயின் கடவா பல்லில் கடித்துக் கொண்டுதான் வேட்டையாடவே செல்வார்கள். காட்டிற்குள் இருக்கும் சிறிய பூச்சிகள் அவர்களை கடித்தால் அந்த விஷமானது அவர்களை பாதிக்காது.

 siriyanangai

ஆனால் இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே விஷத்தன்மை கலந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் அனைத்தும் இயற்கையாகவே நமக்கு கிடைக்க படுவதில்லை. ரசாயன பொருட்கள் கலந்த உணவினை நாம் உண்ணும் போது நம் ரத்தத்திலும் அந்த ரசாயனமானது கலக்கப்படுகிறது. நம் உடலுக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சிறியாநங்கை ஒரு தீர்வாக உள்ளது.

விஷக்கடிக்கு மருந்து

பாம்பு கடி, தேள் கடி இப்படி விஷமுள்ள பூச்சிகள் கடித்தால் சிறியாநங்கை இலை அரைத்து உருண்டையாக்கி விழுங்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மை நீக்கப்படும். வீட்டின் வாசல் பகுதியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்புகள் வராமல் இருக்கும். சிறியாநங்கை இலை மீது பட்டு வரும் காற்று, பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்புகளால் ஓட முடியாமல் போய்விடும்.

 siriyanangai

- Advertisement -

வீக்கம் நீங்க

சிறியாநங்கை இலைகளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்றாக அரைத்து நம் உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதன் மீது பத்து போட்டுவர வீக்கத்தின் அளவானது குறைந்து விடும்.

நீரிழிவு நோய்

சிறியா நங்கை இலைப் பொடியுடன்,  காய்ந்த நெல்லிக்காய் பொடி, வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் இலை பொடி, இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும்.

தேமல் பிரச்சினைக்கு

சிறியாநங்கை வேருடன் அருகம்புல் வேரையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் தேமல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். இந்த மருந்து சாப்பிடும்போது உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

 siriyanangai

சிறியாநங்கை சாறு எடுக்கும் முறை

சிறியாநங்கையின் இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வடிகட்டி மூலம் அதில் உள்ள திப்பிகளை நீக்கி அந்த சாற்றை மட்டும் எடுத்து மருந்தாக பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி அந்த சாற்றினை நாம் குடிக்கும் போது நமக்கு என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு காணலாம்.

இந்த சிறியாநங்கை சாற்றை நேரடியாகவோ அல்லது மோரில் கலந்தோ குடிக்கலாம். குழந்தைகளுக்கு இந்தச் சாற்றை 3mlக்கு மேல் கொடுக்கக்கூடாது. பெரியவர்களாக இருந்தால் 10ml வரை குடிக்கலாம். காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இந்தச் சாற்றை நீண்டநாட்களுக்கு குடிக்கக்கூடாது.

1. இந்தச் சாறு இரத்தத்தை சுத்திகரிக்க பயன்படுத்தப்படுகிறது.

2. புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் ஏற்படும் கெட்ட கழிவினை சுத்தப்படுத்த இந்தச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பூச்சிக்கடி வயிற்றுப்போக்கு இந்தப் பிரச்சினைகள் நீங்க பயன்படுத்தப்படுகிறது.

4. மஞ்சள் காமாலை, மலேரியா விஷக் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குகிறது.

5. சைனஸ் மற்றும் சளி தொந்தரவால் ஏற்படும் பிரச்சனைகளையும் இது நீக்குகிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இது ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

 siriyanangai

6. நம் உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய கெட்ட தேக்கங்கள் அனைத்தும் உள்ளேயே சேர்ந்து விடுவதால் பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கர்ப்பப்பையில் இருக்கும் நீர் கட்டிகள், கொப்பளங்கள், பூச்சிகள் நீங்கவும், இவைகள் வராமல் தடுக்கவும் இந்தச் சாறு பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்க இந்த நீர் கட்டிகளும் ஒரு காரணமாக அமையும்.

சித்த மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சிறியாநங்கையின் சாற்றை நாம் மருந்தாக பயன்படுத்தி கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே
இந்து உப்பிற்கு இவ்வளவு மகத்துவமா?

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Medicinal uses of siriyanangai leaves. Siriyanangai usage in Tamil. Siriyanangai maruthuva payangal. Siriyanangai benefits in Tamil.