சொந்த வீடு ஆசை நிறைவேற இந்த கோயிலிற்கு செல்லுங்கள்

Siruvapuri murugan kovil

சொந்த வீடு என்பது நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் கனவாகவே உள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர் தங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்காத என்று பல காலம் ஏங்கி தவிப்பதுண்டு. ஆனால் அத்தகைய கவலையை போக்கி சொந்த வீடை வாங்க மனதில் உந்து சக்தியை தூண்டி அதற்கு ஏற்றபடி உழைக்கச்செய்து, சொந்த வீடை வாங்க வரம் அளிக்கிறார் சிறுவாபுரி முருகன்.

Siruvapuri murugan

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி என்னும் ஊரில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியர் கோவில். இந்த கோவிலிற்கு சென்று மனதார முருகனை வணங்கி வழிபடுவோருக்கு நினைத்தது நடக்கும் என்கிறார்கள். அதோடு குறிப்பாக சொந்த வீடு வேண்டி முருகனை வழிபட்டால் அவர் நிச்சயம் அதற்கான வழியை காட்டுவார் என்கிறார்கள் பக்தர்கள்.

ராமாயண காலத்தில் ராமனுக்கு அவரது பிள்ளைகளான லவகுசருக்கு போர் நடைபெற்றதை பற்றி நாம் படிதிரும்போம். அந்த போர் இந்த ஊரில் தான் நடந்தது என்று கூறப்படுகிறது. இந்த ஊர் சின்னம்பேடு, குசலபுரி, தென் சிறுவாபுரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரை எப்படி நினைத்தாலே முக்தி கிடைக்குமோ அதே போல சிறுவாபுரி முருகனை நினைத்தாலே அவரது அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முருகனுக்குரிய இந்த திருத்தலத்தை பற்றி அருணகிரி நாதர் பாடியுள்ளார். ஐந்து நிலைகளை கொண்ட இந்த கோவிலில் முருகன் நான்கரை அடி உயரத்தில் நின்ற படி அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார். இந்த கோவில் முருகனை தவிர மற்ற சிலைகள் அனைத்துமே மரகத கல்லால் செய்யப்பட்டவை. இது போன்ற அமைப்பை நாம் வேறெந்த கோவிலிலும் காண முடியாது. அதினும் இங்குள்ள மரகத மயில் இந்த கோயிலிற்கு மேலும் சிறப்பு சேர்கிறது.

இதையும் படிக்கலாமே:
ஆற்று நீருக்கு நடுவே வழிபாடு நடக்கும் கோவில் – வீடியோ

நிலம் சம்மந்தமான பிரச்சனை, சொந்த வீடு கட்டுவதில் தடை இப்படி பூமி சார்ந்த எந்த விடயமாக இருந்தாலும் இங்குள்ள முருகனை வந்து வழிபட்டால் அவர் அதற்கான தேர்வை நமக்கு காண்பித்து அருள்வார் என்பது நம்பிக்கை.

ஆன்மீக தகவல்கள், கதைகள், ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்த்த அணைத்து விடங்களையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.