துன்பங்கள் நீங்க பௌர்ணமி தின சிவ வழிபாடு

thunbam theera
- Advertisement -

பௌர்ணமி என்றாலே கிரிவலம் தான் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இன்றளவும் மாதந்தோறும் பௌர்ணமியில் அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் பல்லாயிரம் பேர். இன்னும் இந்த பௌர்ணமி தினத்திற்கென்று பல விசேஷமான பலன்கள் உள்ளது.

இந்தப் பௌர்ணமியில் சிவபெருமானை வீட்டில் இருந்து எப்படி வழிபாடு செய்து நம்முடைய துன்பங்களை போக்கிக் கொள்வது என்பதையும், கிரிவலம் சென்ற பலனை வீட்டில் இருந்தபடியே எப்படி பெறுவது என்பது பற்றியும் தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பௌர்ணமி நாளில் சிவ வழிபாடு

நம்முடைய பாவங்களையும் கர்மாக்களையும் நீக்கி துன்பங்களில் இருந்து நம்மை விடுவித்து நல்ல முறையில் வாழ வைக்கக் கூடியவர் சிவபெருமான். சிவபெருமானின் பெயரை கேட்டாலே உருகி விடும் அளவிற்கு இன்றளவும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.

அத்தகைய சிவபெருமானின் அருளை நாம் வீட்டிலிருந்து எப்படி பெறுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த பௌர்ணமியானது வெள்ளிக்கிழமை மாலை 5.55க்கு தொடங்கி அடுத்த நாள் சனிக்கிழமை மாலை 6.51 வரை பெளர்ணமி உள்ளது. ஆகையால் இந்த பெளர்ணமி கிரிவலத்தை வெள்ளிக்கிழமை மாலை செய்வது தான் சிறந்தது. இந்த வழிபாட்டையும் நாம் வெள்ளியன்று மாலையில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டில் சிவலிங்கம், ஸ்படிக லிங்கம், நந்தி இதில்எது இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எதுவும் இல்லாத பட்சத்தில் சிவபெருமான் திருவுருவப்படம் இருந்தால் அதையும் எடுத்துக் கொள்ளலாம். இது கூட எங்களிடம் இல்லை என்பவர்கள் ஒரே ஒரு அகல் விளக்கை சிவபெருமானாக பாவித்து அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு சிறிய நாற்காலியை போட்டு அதில் லிங்கம் அல்லது சிவபெருமான் திருவுருவப்படம் எது இருப்பின் அதை வைத்து விடுங்கள். அடுத்ததாக ஒரு சிறிய தட்டில் அகல் விளக்கை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு அந்த விளக்கையும் படத்தின் முன்பு வைத்து விடுங்கள்.

- Advertisement -

எதுவும் இல்லை என்றால் வெறும் விளக்கை மட்டும் இப்படி வைத்தால் கூட போதும். அடுத்து சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக பாயாசம், சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பால் இப்படி உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை வைத்து விடுங்கள். சிவபெருமானை நினைத்து ஏற்றப்படும் இந்த தீபம் கிழக்கு நோக்கி எறியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த தீபத்தையே நீங்கள் சிவபெருமானாக மனதுக்குள் பாவித்து கொண்டு விளக்கை 11 முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வரும் போது ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருங்கள். அதே நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் வருவதாக உங்கள் மனதுக்குள் பாவித்து கொள்ளுங்கள்.

இப்படி வலம் வந்து வழிபாடு செய்து முடித்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள். அதன் பிறகு படம், லிங்கம் அதனை பூஜை அறையில் பழையபடி வைத்து விடுங்கள். தீபத்தை கொண்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

உண்மையான பக்தியுடன் உருகி விடும் மனதுடனும் சிவபெருமானை இந்த முறையில் வணங்கும் போது நிச்சயம் சிவபெருமான் மனமிரங்கி உங்களுக்கு அருள் புரிவார். இந்த வேண்டுதலை செய்வோர் யாராயினும் அவருடைய துன்பங்கள் அனைத்தையும் சிவபெருமான் தீர்த்துவிடுவார்.

இதையும் படிக்கலாமே:

அத்துடன் கிரிவலம் சென்று வழிபட்ட பலனையும் பெறலாம் என்பது தான் கூடுதல் தகவல். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் இந்த வழிபாட்டை செய்து சிவன் அருளை முழுமையாக பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -