சிவன் அருளைப் பெற கிரிவலம்

annamalieshwara chirira pournami
- Advertisement -

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஆலயத்தில் சிவபெருமானை காண உலகெங்கிலும் உள்ள மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்த ஆலயத்தில் கிரிவலம் மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஆலயத்தில் உள்ள மலையே சிவபெருமானாக நினைத்து வழிபடுவதால் இங்கு கிரிவலம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இந்த கிரிவலமானது ஒவ்வொரு பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் இருந்தாலும் சில கிரிவலம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அது கார்த்திகை தீபத்தின் போது சுற்றும் கிரிவலம், சித்ரா பௌர்ணமி தினத்தின் போது சுற்றும் கிரிவலம். அந்த வகையில் நாளைய தினம் அதி முக்கியத்துவம் வாய்ந்த சித்ரா பௌர்ணமி. இந்த கிரிவலத்தின் போது சிவன் அருளை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

சிவன் அருள் முழுமையாக பெற கிரிவலத்தின் போது கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள்

இந்த சித்திரா பௌர்ணமி ஆனது நாளைய தினம் செவ்வாய்க்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4.16 க்கு துவங்கி மறுநாள் புதன்கிழமை காலை 5.43 வரை உள்ளது. ஆகையால் செவ்வாய்க்கிழமை முழுவதுமே கிரிவலம் செல்ல உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் சிவன் அருளை பெற கிரிவலம் செல்லும் போது கையில் இரண்டு பொருள்களை கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது அதைப் பற்றி பார்க்கலாம்.

இந்த கிரிவலம் செல்லும் போது முதலில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றினை யாரிடமும் பேசாமல் சிவபெருமானை மட்டும் மனதிலும் சிந்தையிலும் நினைத்துக் கொண்டு செல்ல வேண்டும். பலரும் கிரிவலம் செல்லும் போது பேசிக் கொண்டும் ஏதேனும் பற்றி சிந்தித்துக் கொண்டும் செல்வார்கள். அப்படி செல்லும் போது கிரிவலத்திற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

- Advertisement -

அதே போல் கிரிவலப் பாதையில் இருக்கும் அனைத்து சிவ லிங்கத்தையும் தரிசனம் செய்து தான் கிரிவலம் சுற்ற வேண்டும். இந்த சிவ தரிசனம் செய்யாமல் கிரிவலம் செய்வதும் பலனை தராது. இப்படி கிரிவலம் செல்லும் நேரத்தில் நாம் எலுமிச்சை கனி அல்லது மாங்கனி இரண்டில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதை நீங்கள் வீட்டிலிருந்து செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும். இதை கையிலோ நீங்கள் கொண்டு செல்லும் பை என எதில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதை வைத்துக் கொண்டு கிரிவலத்தை சுற்றி சிவபெருமானை மனதார வேண்டி வணங்கி விட்டு வர வேண்டும். இந்த பழங்களை நீங்கள் கையோடு வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த பழங்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்த பிறகு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இதை நெய்வேத்தியமாக பகிர்ந்து உண்ண வேண்டும். மாங்கனியாக இருந்தால் அதை அப்படியே சாப்பிடலாம் எலுமிச்சை ஆக இருந்தால் அதை சார்பாக பிழிந்து எலுமிச்சை சாறு பருகலாம்.

இதையும் படிக்கலாமே: கஷ்டத்தை தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்

இப்படி கிரிவலம் செய்யும் போது சிவபெருமானின் உங்களுடன் உங்கள் இல்லம் தேடி வருவார் என்று சொல்லப்படுகிறது. நாம் இறையருளை பெற பல சூட்சம வழிபாடுகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த வழிமுறையும் இதில் விருப்பமுள்ளவர்கள் நாளைய கிரிவலத்தின் போது இதை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -