சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கதிர் அரிவாள். கேரள அரசுக்கு எச்சரிக்கையா?

kathir-arivaal-1
- Advertisement -

சமீப காலங்களில் சபரிமலை கோவில் விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. புனிதமான அக்கோவில் விவகாரத்தில் கேரள மாநிலம் கையாண்ட முறையால் ஒட்டு மொத்த கேரள மக்களும், அம்மாநில அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க இந்த வாரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவன் மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட “கதிர் அரிவாள்”, கேரள மாநிலம் குறித்த அறிகுறியை குறிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

kantha sasti kavasam lyrics

திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக “சிவன் மலை கோவில்” இருக்கிறது. சிவன் மலை என்ற பெயர் இருந்தாலும் இங்கு கோவில் கொண்டிருப்பது முருகப்பெருமான் ஆவார். இக்கோவிலில் வந்து வழிபடும் பக்தர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் கடவுளாக இந்த சிவன் மலை முருகப்பெருமான் இருக்கிறார். தமிழ்நாட்டின் மற்ற கோவில்களில் இருந்து இந்த சிவன் மலை தனித்து காட்டக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் அது இக்கோவிலில் இருக்கும் ஆண்டவர் உத்தரவு பெட்டி.

- Advertisement -

இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டி என்பது இக்கோவிலின் இறைவனான முருகப்பெருமானின் பக்தர்கள் கனவில் முருகப்பெருமான் சில பொருட்களை உணர்த்துவார் என்றும், அக்கனவை கண்ட பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து அர்ச்சகரிடம் அக்கனவில் வந்த பொருள் பற்றி கூறும் போது, கோவிலில் பிரசன்னம் பார்க்கப்பட்டு, இறைவனின் ஆசி கிடைத்த உடன் பக்தரின் கனவில் வந்த பொருள் இந்த ஆண்டவன் பெட்டியில் வைத்து வழிபாடு செய்யப்படும். மற்றொரு பக்தரின் கனவில் வேறொரு பொருளை முருகன் உணர்த்தும் வரை ஆண்டவன் பெட்டியில் இருக்கும் பொருள் பூஜிக்கப்படும். “சங்கிலி, மல்லிகை பூ, செம்மண்” என பலவகையான பொருட்கள் இது வரை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நடக்கவிருக்கும் சம்பவங்களை குறிக்கும் அறிகுறிகளாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.

sivanmalai

அந்த வகையில் தற்போது சிவன் மலை ஆண்டவன் பெட்டியில் பக்தர் ஒருவரின் கனவில் வந்த “கதிர் அரிவாள்” ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடப்படுகிறது. இதை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய உடன் கதிர் அரிவாள் என்பது கேரள மாநிலத்தை ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் என்றும், சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அந்த மாநிலத்தை ஆளும் இடதுசாரி கட்சி நடந்து கொண்ட விதம் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரையும் மனம் நோகச்செய்தது என்றும், எனவே கூடிய விரைவில் அம்மாநிலத்தை ஆளும் இடது சாரி கட்சி மற்றும் அரசின் முடிவை சிவன் மலை ஆண்டவர் பெட்டியில் இருக்கும் கதிர் அரிவாள் குறிப்பதாக பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நூற்றாண்டு சிவன் கோவில்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sickle kept inside Sivan malai aandavar petti. usually, some things will be kept in that box and pooja will happen. The things will come in devotes dream and based on that it will be kept in that box.

- Advertisement -