- Advertisement -

நந்தீஸ்வரர் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் தை மாதத்தில் வந்திருக்கக்கூடிய பிரதோஷம். அதிலும் சோமவாரம் என்று சொல்லப்படும், திங்கட்கிழமையோடு சேர்ந்து இந்த பிரதோஷ நாள் வந்திருப்பது மிக மிக சிறப்பு. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி எங்கள் அப்பன் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம். அடுத்த நாள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பூசம் நட்சத்திரம், தைப்பூச திருவிழா, அப்பனுக்கெல்லாம் அப்பனான முருகப்பெருமானுக்கு விசேஷம்.

இப்படி தொடர் விசேஷ நாட்களில் இறை வழிபாடு செய்வதில் வரும் மன திருப்தியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சரி நாளைய தினம் பிரதோஷ நாளில் எளிமையான முறையில் செய்ய வேண்டிய சிவ வழிபாடு, நந்தி தேவர் வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நந்தி தேவர் வழிபாடு

ஏதோ ஒரு தீராத மன குழப்பம். முடிவு எடுப்பதில் பிரச்சனை. வாழ்க்கையில் பெரிய தடுமாற்றத்தில், மதில் மேல் பூனை போல நிற்கிறீர்கள். இந்த பக்கம் செல்வதா அந்த பக்கம் செல்வதா என்று தெரியவில்லை. உங்களுக்கான பிரச்சனை எது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மனிதர்களுக்கு பிரச்சனைக்காக பஞ்சம். இன்றைய சூழ்நிலைக்கு உங்களுக்கு எது பெரிய பிரச்சனையாக இருக்குதோ, அந்த குழப்பத்திற்கான தீர்வை நாளைய தினம் அந்த ஈசனிடம் ஒப்படைக்க போகிறீர்கள். அந்த நந்தி தேவரிடம் ஒப்படைக்க போகிறீர்கள். எப்படி தெரியுமா.

நாளைய தினம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ காலமாக சொல்லப்படுகிறது. எல்லா சிவன் கோவில்களிலும் நாளைய தினம் விமர்சையாக இந்த பிரதோஷ வழிபாடு நடைபெறும். அந்த கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

நந்தி தேவரின் வலது காதில் உங்களுடைய பிரச்சனையை சொல்லுங்கள். அங்கு சென்று நந்தி காதில் புலம்ப கூடாது. “என்னுடைய வாழ்க்கை வீணாக போய்விட்டது. யார் யாரோ சந்தோஷமாக இருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை மட்டும் கஷ்டமாக இருக்கிறது.” இப்படி எல்லாம் புலம்ப கூடாது. இதுதான் பிரச்சனை, இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு எடுப்பது என்று நீ தான் எனக்கு ஒரு பதிலை சொல்ல வேண்டும், என்று அந்த நந்தி தேவரின் காதில் சொல்லுங்கள்.

உதாரணத்திற்கு சில பேருக்கு படிப்பை முடித்துவிட்டு அடுத்தபடியாக மேல் படிப்பிற்கு எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது என்று தெரியாத குழப்பம் இருக்கும். படிப்பை முடித்து மேல் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்வதா, பிசினஸுக்கு போவதா என்ற குழப்பம் இருக்கும். சில பேருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும். சில பேருக்கு நோய் நொடி பிரச்சனை இருக்கும்.

- Advertisement -

குறிப்பிட்ட அந்த பிரச்சனையை அந்த, நந்தி தேவரின் வலது காதில் சொல்லிவிடுங்கள். அந்த பிரச்சினையை நந்திதேவர் கொண்டுபோய் சிவபெருமான் காதில் போட்டு விடுவார். பிரச்சினைக்கு உண்டான தீர்வை ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு கொடுத்து விடுவார் அந்த ஈசன்.

சிவபெருமானுக்கு உங்கள் கையால் அருகம்புல் மாலையை கட்டி போடுங்கள். ஈசனுக்கு வில்வ இலையை கட்டிக் கொடுங்கள். “சிவ சிவா ஈசனே” பிரச்சனையே உன் கையில் ஒப்படைத்து விட்டேன் இனிமேல் எனக்கு எதுவுமே தெரியாது. நீ தான் ஒரு தீர்வை காட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டு, உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சனிப்பெயர்ச்சியால் பாதிப்புகள் வராமல் இருக்க விநாயகர் வழிபாடு

பாருங்க ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கான பதில் நிச்சயம் கிடைக்கும். நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள். பிரதோஷ நேரத்தில் கோவிலில் ரொம்பவும் கூட்டமாக இருக்கிறது. அடித்துப் பிடித்து நந்தி தேவர் காவல் சொல்லிவிட வேண்டும் என்று ஓட வேண்டாம். பிரதோஷ நேரம் முடிந்தாலும் பரவாயில்லை. 7:30, 8:00 மணிக்கு கோவிலில் கூட்டம் குறையும். அந்த சமயத்தில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்