உங்களின் முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி பெற துதி இதோ

sivan

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இறை சக்தியின் இயக்கம் நடைபெற்ற வாறே இருக்கிறது. நாம் அனைவருமே நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு வேலை, தொழில் ரீதியான செயல்களை தொடர்ந்து செய்த வாறு இருக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகைய புதிதான செயல்களை தொடங்கும் போது அது சிறப்பான வெற்றியை பெற்று நமக்கு நன்மையை தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அதற்கான “நம சிவாய துதி” இதோ.

god siva

நம சிவாய துதி

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைக ஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம சிவாய நாம

சோஷிதா நமத் பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம சிவாய

sivan lingam

யோகிகளுக்கு தலைவன் யோகேஸ்வரனாகிய சிவபெருமானின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் சிவபெருமானை மனதில் நினைத்தவாறு 27 முறை முதல் 108 முறை வரை துதிப்பது நல்லது. மாத சிவராத்திரி, பிரதோஷம் போன்ற தினங்களில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை இந்த மந்திரம் துதித்து வழிபடுவதால் நீங்கள் புதிதாக தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெரும்.உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சாபங்கள், தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -

Sivan

ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொதுவான பொருளாகும். சிவனை மனதில் நினைத்தாலே நமது வல்வினைகள் அனைத்தும் நீங்கும். அத்தகைய சிவபெருமானின் இந்த மந்திரத்தை துதித்து வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
நோய்களை போகும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sivan thuthi in Tamil. It is also called as Shiva mantra in Tamil or Shiva slokas in Tamil or Siva manthirangal in Tamil or Nama sivaya manthiram in Tamil.