- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவராத்திரி சிவ அபிஷேக பலன்கள்

சிவராத்திரி சிவ அபிஷேக பலன்கள்

- Advertisement -

வருடந்தோறும் வரும் தீபாவளி என்பது வெறும் ஒளித் திருவிழா மட்டுமல்ல; அது ஐஸ்வரியத்தையும், வெற்றியையும், ஆனந்தத்தையும் அள்ளித் தரும் நன்னாள். இந்த தீபாவளியை ஒட்டி வரும் சிவராத்திரி தினத்தில், அதாவது அமாவாசை தினத்திற்கு முந்தைய இரவிலோ அல்லது சிலசமயம் அமாவாசை இரவிலோ வரும் மாத சிவராத்திரியில், சிவபெருமானை முறைப்படி வழிபட்டால், நமது வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் நிலைக்கும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இந்த சிவராத்திரிக்கு நாளை எந்த பொருளால், சிவனுக்கு அபிஷேகம் செய்தால், என்ன பலன் கிடைக்கும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

சிவனுக்கு ஒரு குறிப்பிட்ட அபிஷேகப் பொருளைக் கொண்டு வழிபடுவதன் மூலம், அளவற்ற பலன்களைப் பெற முடியும். அந்த அபிஷேகப் பொருள் எது என்று பார்த்தால், அதுதான் பசுவின் பால்! ஆமாம், பசுவின் பாலை கொண்டு நாளை வரக்கூடிய சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்து பாருங்கள், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெறுவீர்கள். எப்பேர்பட்ட வறுமையில் இருப்பவர்களையும் கோடீஸ்வரனாக்கக் கூடிய இந்த சக்தி வாய்ந்த வழிபாடு முறையை சிவபெருமான் பக்தர்கள் செய்ய தவறாதீர்கள்.

- Advertisement -

சிவராத்திரியில் பசும் பால் அபிஷேகத்தின் மகிமை:
நமது வேதங்களும், புராணங்களும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் மிக உயர்ந்ததாகப் பசுவின் பாலைக் கூறுகின்றன. தூய பசும் பாலைக் கொண்டு சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து, மனமுருகப் பிரார்த்தனை செய்தால், பின்வரும் சௌபாக்கியங்களைச் சிவபெருமான் வழங்குவார். சகல ஐஸ்வர்யங்கள்! செல்வம், புகழ், மன நிம்மதி போன்ற அனைத்து ஐஸ்வர்யங்களும் இல்லத்தில் நிலைக்கும்.

நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம்! நோய் நொடி நீங்கி, நீண்ட ஆயுளுடன், திடமான உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம். கடன் நிவர்த்தி! தீராத கடன் தொல்லைகள் விலகி, நிதி நிலைமை சீராகும். மன அமைதி! மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனையும், அமைதியும் உண்டாகும். வறுமை, எப்பேர்பட்ட வறுமையில் இருப்பவர்களையும் இந்த சிவராத்திரியில் பாலபிஷேகம் செய்வதால் சிவனின் மனம் குளிர்ந்து சுகபோக வாழ்க்கையை அருளுவார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

சிவராத்திரி வழிபாட்டு முறை:
நாளை தீபாவளியை ஒட்டிய சிவராத்திரி அன்று, அதிகாலையிலோ அல்லது மாலையிலோ அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்லுங்கள். முடிந்தால், சிவனுக்கு செய்யக்கூடிய மற்ற அபிஷேகப் பொருட்களுடன், தூய பசும் பாலையும் வாங்கி சிவனுக்கு அளியுங்கள். உங்களால் இயன்றால், வீட்டிலேயே சிறிய சிவலிங்கத்திற்குத் தூய்மையான பால் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் செய்யும் போது, ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே:
எமதர்மராஜனின் அருளை பெற உதவும் எம தீபம் ஏற்றும் முறை

பின்பு, வில்வம், துளசி போன்ற இலைகளால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி, மனமுருகி உங்களின் வேண்டுதல்களை சிவனிடம் சமர்ப்பியுங்கள். இந்த பிரார்த்தனையையும், அபிஷேகத்தையும் கோவிலுக்கு சென்று செய்ய முடியாதவர்கள், வீட்டிலே சிறிய லிங்கம் ஒன்றை வைத்து, விரதம் இருந்து நீங்கள் அபிஷேகம் செய்து அதன் மூலம் பயனடையலாம். சிவபெருமானின் திருவருளால், உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது நிச்சயம்! நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

சற்று முன்