நாளை (26/7/2022) சிவராத்திரி, பிரதோஷத்துடன் சேர்ந்து வரும் அற்புத நாள்! கஷ்டங்களும், துன்பங்களும் நீங்கி, செய்த பாவங்கள் விலகி, வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட நாளை சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

sivan-nandhi-pradosham
- Advertisement -

சுபகிருது ஆண்டின் ஆடி மாதத்தில் வரக்கூடிய இந்த மாத சிவராத்திரி அன்று பிரதோஷமும் சேர்ந்து வந்துள்ளது. பொதுவாக சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரியுடன் கூடிய இந்த பிரதோஷம் ரொம்பவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் சிவனை எப்படி வழிபட்டால் நம்முடைய பாவங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவல்களாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சிவனை வழிபடும் ஒவ்வொருவரும் மன அளவில் திடம் பெறுகிறார்கள். மனோதிடத்தை வாரி வழங்கும் ஈசனுக்கு உகந்த இந்த சிவராத்திரியுடன், பிரதோஷமும் சேர்ந்த நன்னாள் ரொம்பவே விசேஷமானது. இந்நாளில் தானம் செய்வது, பிரதோஷ வழிபாடு மேற்கொள்வது போன்றவற்றை செய்து வருபவர்களுக்கு துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதீகம்.

- Advertisement -

பௌர்ணமிக்கு மற்றும் அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக திரியோதசி திதியில் பிரதோஷம் நிகழ்கிறது. இந்த பிரதோஷம் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலகட்டத்தில் சிவனுக்கு உகந்ததாக இருக்கிறது. இந்நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள வழிபாடுகளில் கலந்து கொள்வது ரொம்பவே புண்ணியத்தை கொடுக்கக்கூடிய வழிபாடாகும். சிவனுக்கு செய்யக்கூடிய அபிஷேகங்களில் உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது போல அன்றைய நாளில் அன்னதானம் செய்வது ரொம்பவும் முக்கியமானது. சிவராத்திரி மற்றும் பிரதோஷம் சேர்ந்த இந்நாளில் உங்களால் முடிந்தவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தால் நீங்கள் செய்த புண்ணியம் இரட்டிப்பாகும்.

காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கு ஏற்றி சிவ வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, விளக்கு ஏற்றி சிவ மந்திரங்களை உச்சரிப்பதும், சிவபுராணம் கேட்பதும் ரொம்பவே அற்புதமான பலன்களை கொடுக்கக் கூடியது. சிவம் என்பது சுகம் என்கிற பொருள் வருகிறது எனவே சிவவிரதத்தை அனுஷ்டித்தால் குடும்ப நன்மைகள் பெருக துவங்கும். வறுமை, கடன், நோய் போன்றவை தலைதெறிக்க ஓடிவிடும். இதனால் மனவலிமை அதிகரித்து மகிழ்ச்சி பெருகும்.

- Advertisement -

இன்றைய நாளில் உண்ணா நோன்பு இருந்து விரதமும் மேற்கொள்வார்கள். சாப்பிடாமல் விரதம் இருந்து தண்ணீர் மற்றும் பழ ரசங்களை மட்டும் முடியாதவர்கள் குடித்து சிவனுக்கு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நான்கு சாம பூஜைகளிலும் சிவராத்திரி அன்று கலந்து கொள்பவர்களுக்கு முத்தி கிடைக்க பாதை உண்டாகும் என்பது நம்பிக்கை. வீட்டிலேயே லிங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு பால், தயிர், விபூதி மற்றும் சிவனுக்கு உகந்த அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

இந்த சிவராத்திரி மற்றும் பிரதோஷம் இணைந்து வரும் நாளில் விரதம் மேற்கொள்வது, தானம் செய்வது மட்டும் அல்லாது சிவா ஸ்தோத்திரங்களை உச்சரித்தால் மறுபிறவி என்பதே இருக்காதாம். சூரியன், மன்மதன், இந்திரன், எமதர்மராஜன், சந்திரன், முருகன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு வரம் பெற்றுள்ளனர். அது போல நாமும் சிவவிரதத்தை மேற்கொண்டால் நமக்கும் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் ஈசனை வழிபட்டு அனைவரும் பயன் பெறலாமே!

- Advertisement -