மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும். அந்த சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்று விடலாம்.

sivarathiri
- Advertisement -

இந்த வருடம் மஹா சிவராத்திரி 18.2.2023 ஆம் தேதி வரவிருக்கின்றது. இந்த வருட சிவராத்திரி நமக்கு இரட்டிப்பு பலனை தரும். சனிக்கிழமை அன்று, சனி பிரதோஷத்தன்று, சிவராத்திரி வர விருப்பதால், இந்த சிவராத்திரியை யாரும் தவற விடாதீர்கள். இந்த நாளில் சிவன் வழிபாடு செய்வது என்பது நமக்கெல்லாம் கிடைத்த ஒரு பெரும் பாக்கியம். சிவராத்திரி அன்று முறையாக எப்படி விரதம் எடுப்பது, எப்படி விரதத்தை தொடங்கி, எப்படி விரதத்தை முடிப்பது, சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற எந்த மந்திரத்தை உச்சரிப்பது என்ற ஆன்மீகம் சார்ந்த பல தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மஹா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:
வழக்கம் போலத்தான் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், அதிகாலை வேலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்து குளித்து விட வேண்டும். 18ம் தேதி அதிகாலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானின் திருவுருவப்படம் அல்லது லிங்கம் இருந்தால் அதற்கு முறையான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிவபெருமானின் லிங்கம் இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. குறிப்பாக சிவபெருமான் அபிஷேக பிரியர். சுத்தமான தேன் வாங்கி அந்த தேனின் மூலம் சிவபெருமானுக்கு சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்தால் உங்களுடைய வாழ்வு தேன் போல இனிமையாக இருக்கும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை கொண்டு அலகாரம் செய்து, ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி விரதத்தை தொடங்குங்கள்.

18ஆம் தேதி காலை விரதத்தை தொடங்க வேண்டும். சாப்பிடாமல் விரதம் இருப்பது அல்லது பால் பழம் சாப்பிட்டு விரதம் இருப்பது அல்லது ஒரு வேலை உணவு சாப்பிட்டு விரதம் இருப்பது, எல்லாம் அது அவரவர் உடல் சௌகரியத்தை பொறுத்தது. எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் அவர்கள் கட்டாயம் தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டின் அருகில் சிவன் ஆலயங்கள் ஏதேனும் இருந்தால், அந்த கோவிலுக்கு சென்று சிவ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த மகா சிவராத்திரியில் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்வது நமக்கு கோடி புண்ணியத்தை தேடி தரும். ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ செழிப்பான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை, நவகிரக தோஷத்தில் இருந்து விடுதலை என்று பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த வழிபாடு ஒன்றே நமக்கு போதுமானது.

ஆக 18ஆம் தேதி காலை முதல் விரதத்தை தொடங்கி விட்டீர்கள். 18ம் தேதி இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் 19ம் தேதி காலை தான், உணவு சாப்பிட்டு உங்களுடைய விரோதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும். 19ஆம் தேதி அன்றும் காலை தூங்கக் கூடாது. 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சிவபெருமானி தரிசனம் செய்துவிட்டு விரதத்தை நல்லபடியாக முடித்ததற்கு சிவபெருமானிடம் நன்றி தெரிவித்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்ல வேண்டும். இதுதான் முழுமையான சிவராத்திரி விரதம் இருக்கும் முறை.

- Advertisement -

சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?
எல்லோருக்கும் உடல்நிலை விரதம் இருக்கவும், கண்விழிக்கவும் ஒத்துழைக்காது அல்லவா. ஆகவே உடல்நிலை சரியில்லாதவர்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். மனதார சிவராத்திரி அன்று 1 மணி நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சவுகரியம் 18ம் தேதி காலை 6 மணியிலிருந்து உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது 1 மணி நேரம் எம்பெருமானுக்காக ஒதுக்கி, ஒரு இடத்தில் அமர்ந்து ‘சிவசிவ’ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.

எத்தனை முறை மந்திரத்தை உச்சரிப்பது என்ற கணக்கு வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு மணி நேரம் இறைவனுக்காக இந்த நாமத்தை சொன்னாலே போதும். சிவராத்திரி அன்று விரதம் இருந்த முழு பலனை நீங்கள் அடைந்து விடுவீர்கள்.

அதேபோல சிவராத்திரியில் மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானை தரிசனம் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. 18ம் தேதி நள்ளிரவு சரியாக 12.00 மணிக்கு சிவ ஆலயங்களில் மூன்றாம் கால பூஜை நடைபெறும். அதில் கலந்து கொண்டு உங்கள் கையால் சிவபெருமானுக்கு வில்வ இலையை சாற்றுவது மிக மிக அற்புதமான பலன்களை கொடுக்கும். நீங்கள் வேண்டிய வரத்தை இந்த நேரத்தில் கேட்டால் அது உடனடியாக நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: வாங்கி வச்ச கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். கழுத்தை நெரிக்கும் கடனும் காணாமல் போகும்.

சிவபெருமான் மனம் குளிர்ந்து வரங்களை அளிக்கக்கூடிய மிக சிறப்பு வாய்ந்த நேரம் இது. காரணம் இந்த மூன்றாம் கால பூஜையில் தான் பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் சிவராத்திரி அன்று மேல் சொன்ன வழிபாட்டு முறைகளில் உங்களால் முடிந்த வழிபாட்டை செய்து சிவன் அருள் ஆசியை பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -