உங்கள் முகத்தில் இருக்கும் தோல் தொங்கி போகாமல் நன்கு இறுக்கமாக கண்ணாடி போல பொலிவுடன் இருக்க சாதத்தை வடிக்கும் முன் இப்படி செய்யுங்கள்!

face-mask-rice-water
- Advertisement -

நம்முடைய முகத்தில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தோல் சுருக்கங்கள் ஏற்படுவது வழக்கம். சிலருக்கு இளமையிலேயே சருமம் தொங்கி போய் பொலிவில்லாமல் மங்கலாக காணப்படுகிறது. முகத்தில் இருக்கும் தோல் சுருக்கம் நீங்கி, முகம் இறுகி நல்ல ஒரு கண்ணாடி போல பொலிவான தோற்றத்தை பெறுவதற்கு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ள சாதம் பெருமளவு உதவி செய்கிறது. இதனுடன் நாம் சேர்க்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? சாதத்தை எப்படி பயன்படுத்தி முகத்தை இறுக்கத்துடன் கண்ணாடி போல பொலிவாக மாற்றுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகத்தில் இருக்கும் தொங்கிப் போன சருமத்தை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் விட்டமின்கள் சாதம் வடிப்பதற்கு முன் இருக்கும் நிலையில் இருக்கக்கூடிய பருக்கையிலும் அதன் தண்ணீரிலும் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் உலையில் அரிசியை போட்ட பிறகு நன்கு அரிசி வெந்து வந்திருக்கும். வெந்த பிறகு வடிக்கும் முன்பு இருக்கக்கூடிய சாதம் மற்றும் தண்ணீரை சேர்த்து அரை கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இதை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நைஸாக க்ரீம் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு விட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விட்டமின் ஈ நம்முடைய சருமத்திற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து ஆரோக்கியமாக்கும். சரும எலும்புகளுக்கு வலு கொடுக்கக்கூடிய இந்த கேப்ஸ்யூல் எல்லா மருந்தங்களிலும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒன்றுதான். இதை சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் ஒரு கப் தண்ணீரில் 2 ஸ்பூன் ஆலிவ் விதைகள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடம் நன்கு கொதித்ததும் ஆளி விதைகள் ஜெல் போல உங்களுக்கு கிடைக்கும்.

இதை ஒரு சுத்தமான துணியில் சேர்த்து ஆறிய பின்பு நன்கு வடிகட்டினால் கெட்டியான ஜெல் வடிவத்தில் உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆலிவ் விதை ஜெல் மற்றும் நீங்கள் எடுத்திருக்கும் சாதக்கூல் இரண்டும் ஒரே அளவிற்கு இருக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் நன்கு கலந்து ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். மீண்டும் இதே போல செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஆளி விதையில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின், மினரல், மெக்னீசியம், பொட்டாசியம், ஐயர்ன் என்று எல்லா வகையான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனுடன் சாத கூல் மற்றும் விட்டமின் ஈ சேரும் பொழுது நம் முக சுருக்கங்களை போக்க கூடிய நன்மைகள் நிறைந்துள்ள ஒரு ஃபேஸ் பேக் நமக்கு கிடைக்கும். ஒருமுறை செய்து வைத்து ஒரு வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அப்படியே பயன்படுத்த கூடாது. ஒரு மணி நேரம் குளிர்ந்த நிலையில் இருக்கும் இதனை, நன்கு ஆற விட்டு விட்டு பின்னர் முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் துடைத்து எடுத்து விடுங்கள். இது போல வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்து வந்தால் தொங்கிப் போன முகமும் நன்கு இறுகி கண்ணாடி போல இயற்கையாகவே பளபளன்னு மின்னும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியப்படுவீங்க!

- Advertisement -