கருவறைக்குள் நாகம் வந்து சிவ பூஜை செய்த அதிசயம்

Snake-with-lingam
- Advertisement -

மனிதர்கள் மட்டும் அல்லாது பல உயிரினங்களும் கடவுளை வணங்கத்தான் செய்கின்றன. கடவுளும் அனைத்து உயிரினங்களையும் சரி சமமாகத் தான் பாவிக்கிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நாகம் வில்வத்தை கொண்டு சிவ பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

Snake pooja

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது வேத நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு பாம்பு வந்து சிவலிங்கத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய்தது. வெள்ளிக்கிழமையான அன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக அர்ச்சகர் கருவறையை திறந்து வைத்துவிட்டு நீர் கொண்டுவர சென்றார்.

- Advertisement -

அப்போது அந்த கோவிலின் தலவிருட்சமான வில்மரத்தில் இருந்து ஒரு நல்ல பாம்பு மெதுவாக வருவதை பலர் கண்டனர். அதன் வாயில் ஒரு வில்ல இலையை ஏந்தியவாறு அது சுவாமியின் அபிஷேக நீர் வெளியேறும் துவாரம் வழியாக கருவறைக்குள் மெதுவாக சென்றது. பிறகு சிவலிங்கம் மீதேறிய அந்த பாம்பு தன்னுடைய வாயில் இருந்த வில்வத்தை லிங்கத்தின் மீது வைத்து பூஜித்தது.

Snake pooja

இந்த சிவபூஜையை அந்த பாம்பு அந்த குறிப்பிட்ட நாளில் பல முறை செய்தது பலரையும் மெய் சிலிர்க்கவைத்தது. சரியாக சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சற்று முன்பு, ராகு கால நேரத்தில் இந்த அர்ச்சனையானது நடைபெற்றது. பலரையும் வியப்பில் ஆழ்த்திய இந்த நிகழ்வு நடந்த பிறகு அந்த கோவிலின் தலபுராணத்தை பலரும் ஆராய துவங்கினர். அதில் வாசுகி, கார்கோடகன், தக்கன் உள்ளிட்ட ஏழுவகை பாம்புகளும், ராகு கேதுவும் இந்த கோவிலின் சிவலிங்கத்தை பூஜித்திருப்பது தெரியவந்தது.

- Advertisement -

Snake pooja

இந்த நிகழ்வு நடந்து ஆறு வருடங்களுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் இந்த கோவிலில் நாகம் வாசம் செய்தது அனைவரையும் மீண்டும் வியப்பில் ஆழ்த்தியது. இங்குள்ள சிவனுக்கு ருத்ராட்ச கவசம் சார்த்தப்பட்டு அந்த கவசமானது தனி அறையில் வைக்கப்படுவது வழக்கம். அப்படி வைக்கப்பட்டிருந்த ருத்ராட்ச கவசத்திற்கு ஆரத்தி காட்டுவதற்காக அந்த கோவில் அர்ச்சகர் சென்றுள்ளார். அப்போது அவர் பாம்பு பாம்பு என்று அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளார்.

Snake pooja

அங்கு இருந்தவர்கள் அனைவரும் உள்ள சென்று பார்க்கையில் ஆறடி நீளமுள்ள ஒரு பாம்பின் சட்டை ருத்ராட்ச கவசம் மீது இருந்துள்ளது. இதை கண்டு அனைவரும் மெய் சிலிர்த்தனர். இந்த நிகழ்வானது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இது போல இன்னும் பல மெய் சிலிர்க்கும் நிகழ்வுகள் இந்த கோவிலில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த கோவிலில் வீற்றிருக்கும் சிவனை வணங்கினால் பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
கோவில் இருந்த கல் யானை ஒன்று உயிர் பெற்று கரும்பு தின்ற உண்மை சம்பவம்

English Overview:
There was a miracle happened in Lord Sivan temple near Kumbakonam in Tamil Nadu. Cobra came into the temple and worshiped Lord Shiva. This was happened on 2010 January during Rahu kalam.

- Advertisement -