இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா போதும் ஒரே நேரத்தில் 100 சப்பாத்தி கூட அசால்டா செஞ்சிரலாம்.

chapathi rice
- Advertisement -

நம்முடைய அதிகமாக எடுத்துக் கொள்ளும் உணவு என்றால் அது அரிசியில் செய்யும் சாதம், இட்லி, தோசை போன்றவை தான். அதற்கு அடுத்தபடியாக ஒரு உணவை அனைவரும் அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் என்றால் அது கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி தான். இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகவும் உள்ளது.

என்ன தான் சப்பாத்தி பிடித்த உணவாக இருந்தாலும் மாவை பிசைந்து திரட்டி ஒவ்வொன்றாக போட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். இதனாலையே பலரும் பெரும்பாலும் சப்பாத்தியை தவிர்த்து விடுவார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல சப்பாத்தி செய்தால் நூறு சப்பாத்தியை கூட சுலபத்தில் சுட்டு எடுத்து விடலாம். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சப்பாத்தி சுலபமாக சுட்டு எடுக்க

இந்த முறையில் சப்பாத்தி செய்ய முதலில் உங்களுக்கு தேவையான அளவு மாவை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாவில் உப்பை மட்டும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கலந்து விடுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதன் உட்புறம் வெண்ணெய் தடவி விடுங்கள். வெண்ணெய் இல்லாத பட்சத்தில் எண்ணெய்யும் தடவிக் கொள்ளலாம்.

அடுத்து கலந்து வைத்த மாவை ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முதலில் இரண்டு முறை பல்ஸ் மோடில் விட்டு எடுங்கள். இந்த மாவு அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும். அடுத்து லேசாக தண்ணீர் தெளித்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றிய பிறகு இப்பொழுது மூன்று அல்லது நான்கு முறை பல்ஸ் மோடில் விட்டு எடுத்தால் மாவு தயார்.

- Advertisement -

இந்த மாவை எடுத்து அப்படியே சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து கொள்ளுங்கள். நாம் சாதாரணமாக மாவு பிசையும் போது சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி மிக்ஸியில் மாவை பிசையும் போது ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. மாவை பிசைந்தவுடனே சப்பாத்தி தயார் செய்து விடலாம்.

அடுத்து சப்பாத்தி திரட்டும் பொழுது நாம் ஒவ்வொன்றாக திரட்டி ஒவ்வொன்றாக போட்டு எடுப்போம். அதற்கும் ஒரு சுலபமான டிப்ஸ் உள்ளது. மாவை திரட்டும் போது மேலே லேசாக எண்ணெய் சேர்த்து திரட்டி விடுங்கள். அதன் பிறகு அதன் மேலே லேசாக மாவை தூவி எடுத்து வையுங்கள்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு சப்பாத்தி திரட்டும் போது எண்ணெய் தேய்த்த பிறகு மேலே மாவை தூவி ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி வைத்தால் விடுங்கள். சப்பாத்தி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. இதனால் ஒவ்வொரு சப்பாத்தியை திரட்டும் வரை காத்திருக்காமல், மொத்தமாக திரட்டி உடனே தோசை கல்லில் போட்டு சுட்டு எடுத்து விடலாம் இதனால் நேரமும் மிச்சம் கேசும் மிச்சம்.

இவை அனைத்திலும் விட இன்னும் சுலபமான ஒரு டிப்ஸ். இதற்கு ஒரு வெள்ளை நிற காட்டன் துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி நிறைய அரிசியை சேர்த்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் சப்பாத்தியை கல்லில் போட்டவுடன் ஒரு நிமிடம் மூடி போட்டு மூடி எடுத்து விடுங்கள். அதன் பிறகு விருப்பப்பட்டால் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் தயார் செய்து வைத்த இந்த அரிசி மூட்டையை சப்பாத்தியின் மீது ஒட்டி எடுத்தால் போதும். சப்பாத்தியே பூரி போல புசுபுசுவென்று வெந்து உப்பி வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: பூஜைக்கு வாங்கின பொரி இருந்தா இப்படி ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க.

இந்த முறையும் சப்பாத்தி சீக்கிரம் வேக உதவி செய்யும். அதே நேரத்தில் கேஸ் செலவும் பாதியாக குறையும். இப்படி ஒரு முறை நீங்க சப்பாத்தி செஞ்சு பாருங்க மாவு பிசைவதில் இருந்து திரட்டுவதில் இருந்து போட்டு எடுப்பது வரை அனைத்துமே சுலபமாக இருக்கும். அதே நேரத்தில் கேஸ் அளவு மிச்சம் ஆகும்.

- Advertisement -