பூஜைக்கு வாங்கின பொரி இருந்தா இப்படி ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க.

pori snacks
- Advertisement -

இப்போ இந்த சீசன்ல எல்லார் வீட்டிலுமே பொரி நிச்சயம் இருக்கும். பொரி உடலுக்கு எவ்வளவு நல்லது என்றாலும் அதை அப்படியே கொடுத்தால் நிச்சயமாக யாரும் சாப்பிட மாட்டார்கள். அதே பொரியை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

பொரி – 4 கப்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம் மீடியம் சைஸ் – 1,
சில்லி பிளக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
இஞ்சி – சிறிய துண்டு
அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து பொரியை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இது லேசான கொரகொரப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்.

இப்போது அரைத்த பொரி மாவை ஒரு பவுலில் கொட்டி விடுங்கள். அத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, சில்லி பிளக்ஸ், உப்பு இவை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, அனைத்தும் பொடியாக நறுக்கி அதை இந்த சேர்த்துக் கொள்ளுங்கள். முதலில் தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது. உருளைக்கிழங்கு, வெங்காயம் இதில் உள்ள ஈரத்திலே மாவை பிசைய வேண்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து கலந்து வைத்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு சிறிது நேரம் கழித்து மறுபடியும் திருப்பி போட்டு சிவந்த பிறகு எடுத்து விடுங்கள். அருமையான பொரி போன்ற தயார்.

இதையும் படிக்கலாமே: உளுந்து சேர்க்காமல் பஞ்சு போல சாஃப்ட் இட்லி செய்வது எப்படி?

இந்த ஸ்நாக்ஸ்க்கு தேங்காய் சட்னி புதினா சட்னி, காரச் சட்னி என அனைத்துமே சூப்பராக இருக்கும். விருப்பப்பட்டால் குழந்தைகளுக்கு சாஸ் வைத்தும் கொடுக்கலாம். இன்னைக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு பாருங்க.

- Advertisement -