இனி இட்லி செய்ய அடுப்பு, இட்லி பாத்திரம் எதுவுமே தேவையில்லை, இட்லி சாப்பிட நினைச்ச உடனே இட்லி ரெடி பண்ணிடலாம் தெரியுமா? அட ! இது எப்படின்னு ஆச்சரியமா இருக்கு இல்ல வாங்க அதையும் தெரிஞ்சுக்கலாம்!

- Advertisement -

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு என்றால் அது இட்லி தான். இந்த இட்லி எத்தனையோ வகையில் உள்ளது அதை பற்றி சொல்லப் போனால் இந்த ஒரு பதிவு பத்தாது. நாம் பொதுவாக செய்யும் இட்லியானது அரிசி உளுந்து இவைகளை ஊற வைத்து அரைத்து மாவாக்கி செய்வது. இப்போது இன்ஸ்டன்ட் மாவும் வந்து விட்டது. மாவு எப்படி தயார் செய்து வைத்தாலும் இட்லி செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக இட்லி பாத்திரம், அதை சமைக்க அடுப்பு வேண்டும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அடுப்பு, இட்லி பாத்திரம் எதுவும் இல்லாமல் இட்லி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த இட்லி செய்வதற்கு முதலில் ஒரு முழு தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நல்ல திக்கான தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை எலுமிச்சைப்பழம் சாறை பிழிந்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள். இது இரவு முழுவதும் அப்படியே வைத்தால் அடுத்த நாள் திக்கான தேங்காய் பால் தயிர் நமக்கு கிடைத்து விடும். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது தேங்காய்ப் பால் திக்காக இருக்க வேண்டும் அதிக தண்ணீரை இருக்கக் கூடாது.

- Advertisement -

அடுத்து இரண்டு கப் வெள்ளை அவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் செய்து கொள்ளுங்கள். இது கொஞ்சம் லேசான நறநறப்பு தன்மையுடன் இருந்தால் போதும் அதிக கொரகொரப்பாக இருக்க வேண்டாம்.

இப்போது ஒரு பவுலில் தேங்காய் பால் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே கப்பில் ஒரு கப் அரைத்த அவல் பவுடர், உப்பு சேர்த்து விடுங்கள். இப்போது லேசாக தண்ணீர் தெளித்து மாவை கரண்டி வைத்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை நன்றாக கலந்த பிறகு மேலும் ஒரு கப் அரைத்த அவல் பவுடரை சேர்த்து தண்ணீர் தெளித்து மாவில் கலந்து கொள்ளுங்கள். இந்த மாவை கொஞ்ச நேரம் வரை நான் கரண்டி வைத்து தண்ணீர் தெளித்து கலக்க வேண்டும். மாவை கையில் எடுத்து பிடித்தால் மாவு ஒட்ட வேண்டும். அது தான் இட்லி செய்ய சரியான பதம்.

இப்போது ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு குழம்பு கரண்டியும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த குழம்பு கரண்டியில் நீங்கள் தயார் செய்து வைத்து இந்த மாவை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் வைத்து அழுத்திய பிறகு, உங்கள் கையில் வைத்து தட்டினால் அழகான இட்லி பதத்திற்கு இந்த மாவு கிடைத்து விடும். இதை அப்படியே அந்த கடாயில் வைத்து விடுங்கள். அனைத்து மாவையும் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மாவை ஒரு தட்டு போட்டு இறுக்கமாக மூடி அரை மணி நேரம் வைத்து விடுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு எடுத்துப் பார்த்தால் நீங்கள் வைத்த மாவு இட்லி பதத்திற்கு தயாராகி இருக்கும். இது அப்படியே நாம் மாவரைத்து ஊற்றும் இட்லி போலவே இருக்கும். இதே இட்லியை மாவு வைக்கும் முன் கொஞ்சம் கேரட், கொத்தமல்லி பொடியாக நறுக்கி அதன் பிறகு செய்தால் பார்க்க இன்னுமே அழகாக இருக்கும்.

அவல் இந்த தேங்காய் பால் தயிர் வைத்து செய்வதென்றால் மாவு உதிரியாக இருக்குமோ என்ற எண்ணம் எல்லாம் உங்களுக்கு தேவையே இல்லை. நாம் சாதாரணமாக இட்லி போலவே இதுவும் பர்பெக்டாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கேழ்வரகு அல்வா செய்வது எப்படி

இந்த இட்லிக்கும் நாம் எப்போதும் போல காரச் சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் இப்படி எதை வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம் அனைத்துமே பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -