பல் இல்லாதவங்க கூட இந்த சப்பாத்தியை ஈசியா சாப்பிடலாம். ராகி மாவில் சாஃப்ட் சப்பாத்தி செய்வது ரொம்ப ரொம்ப ஈசி. இந்த ரெசிபியை தெரிஞ்சிகிட்டா.

chappathi1
- Advertisement -

கோதுமை மாவில் சப்பாத்தி சுடுவதற்கே பெரும்பாடு. இதில் ராகி மாவில் சப்பாத்தியா என்று சில பேர் யோசிக்கலாம். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, எல்லாம் இப்படி ராகி மாவில் சப்பாத்தி செய்து கொடுப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல குழந்தைகள் ராகி மாவை அடை செய்து கொடுத்தாலோ, கஞ்சி வைத்து கொடுத்தாலோ, குடிக்க மாட்டாங்க. இப்படி ராகி மாவில் சப்பாத்தி சுட்டு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். பஞ்சு போல லேயர் லேயராக வரும்படி சப்பாத்தி சுடலாம். பக்குவமாக ராகி மாவில் சப்பாத்தி சுடுவது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

ஒரு டம்ளர் எடுத்துக்கோங்க மாவை அளப்பதற்கும் அதே டம்ளர். தண்ணீரை அளப்பதற்கும் அதே டம்ளர். 1 டம்ளர் அளவு ராகி மாவு எடுத்தால், அதே டம்ளரில் 3/4 டம்ளர் அளவு, தண்ணீர் நமக்கு தேவை. அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு தண்ணீர் கொதித்து வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ராகி மாவை அதில் கொட்டி ஒரு கலக்கு கலக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

மாவை லேசாக கலந்து விட்டு அடுப்பை அணைத்துவிட்டு இந்த மாவுக்கு மேலே ஒரு மூடி போட்டு அப்படியே விட்டு விடுங்கள். (இப்போது மாவு கட்டி கட்டிகள் ஆகத்தான் இருக்கும். அது அப்படியே இருக்கட்டும்).

அந்த சூட்டிலேயே மாவு பக்குவம் ஆகட்டும். மாவு கை பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருங்கள். பிறகு உங்களுடைய கையை தண்ணீரில் நனைத்து நனைத்து இந்த மாவை பிசைய தொடங்குங்கள். மாவு கையில் ஒட்டாமல் சூப்பராக சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்துவிடும். தேவையான உருண்டைகளை இந்த மாவில் இருந்து உருட்டி, இந்த ராகி மாவையே தொட்டு எப்போதும் போல சப்பாத்தி தேய்க்க வேண்டும்.

- Advertisement -

ரொம்பவும் தடிமனாக தேய்க்க வேண்டாம். ரொம்பவும் மெலிசாக தேய்க்க வேண்டாம். சப்பாத்தி போலவே தேய்த்து இதை தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போடுங்க. வேற எதுவுமே செய்யாதீங்க. சப்பாத்தி புசுபுசு என்று அப்படியே பொங்கி எழும்பி வரும் பாருங்க. (சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டவுடன் எண்ணெய் நெய் எதுவுமே ஊற்றக்கூடாது. சப்பாத்தி வெந்து புசுபுசுவென பொங்கி வந்ததும், இறுதியாக அதன் மேலே எண்ணெய் அல்லது நெய் தடவி பரிமாறலாம்.) உப்பி வந்த ராகி சப்பாத்தியை பிரித்தால் மேலே ஒரு லேயர், கீழே ஒரு லேயர் சூப்பராக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க குக்கரில் 5 நிமிடத்தில் எப்படி டிபன் சாம்பார் வைப்பது?

இந்த சப்பாத்திக்கு உங்கள் விருப்பம் போல ஏதாவது கிரேவியை பரிமாறலாம். கோதுமை மாவில் சப்பாத்தி செய்வதைவிட இந்த ராகி மாவில் சப்பாத்தி செய்வது அவ்வளவு ஈஸின்னா பாத்துக்கோங்க. ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. இதனுடைய சுவை உங்களை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க. ஆரோக்கியம் தரும் இந்த ரெசிபியை வாரத்தில் ஒரு நாள் ஆவது செஞ்சு சாப்பிடுங்க.

- Advertisement -