- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்மணக்க மணக்க குக்கரில் 5 நிமிடத்தில் எப்படி டிபன் சாம்பார் வைப்பது?

மணக்க மணக்க குக்கரில் 5 நிமிடத்தில் எப்படி டிபன் சாம்பார் வைப்பது?

- Advertisement -

இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு தினமும் சட்னி செய்து போர் அடித்து போனவர்கள், சில சமயங்களில் சாம்பார் வைக்க சோம்பல் தனம் படுவது உண்டு. ஆனால் ஐந்தே நிமிடத்தில் குக்கரில் சூப்பராக சாம்பார் எப்படி வைப்பது? மணக்க மணக்க டிபன் சாம்பார் ஈசியாக செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம், பச்சை மிளகாய் – 6, பெரிய வெங்காயம் – இரண்டு, தக்காளி – இரண்டு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காய தூள் – சிட்டிகை அளவு, பூண்டு – நான்கு பல், சாம்பார் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

டிபன் சாம்பார் செய்வதற்கு முதலில் 100 கிராம் அளவிற்கு துவரம்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வையுங்கள். அதில் நீங்கள் ஊற வைத்துள்ள பருப்பு சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காய தூள், தேவையான அளவிற்கு உப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை போட்டு கொள்ளுங்கள். பின்னர் குக்கரை மூடி போட்டு மூன்றில் இருந்து நான்கு விசில் விட்டு நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயத்துடன் பூண்டு பற்களையும் தோல் உரித்து பொடியாக நறுக்கி போட்டு வதக்குங்கள். இவை நன்கு வதங்கி வந்த பின்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இனி ஆப்பத்துக்கு மாவு அரைச்சு கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை. வெறும் 10 நிமிடத்தில் இதோ இப்படி கூட ஆப்ப மாவு தயார் செய்யலாமே.

பின்னர் நீங்கள் குக்கரில் தயார் செய்து வைத்துள்ள பொருட்களை மத்து வைத்து நன்கு கடைந்து, இதில் ஊற்றி ஒரு ரெண்டு நிமிடம் மூடி போட்டு வேக விடுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது நறுக்கிய மல்லி தழை தூவி இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என்று எல்லாத்துக்குமே பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த டிபன் சாம்பார் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. நீங்களும் இதே போல உங்க வீட்டில் சமைத்து அசத்துங்க! இனி சட்னி வைக்கும் நேரத்தில் சாம்பாரே செய்து அசத்தலாம்.

சற்று முன்