குடும்ப சண்டைக்கு இதை விட சுலபமான பரிகாரம் இருக்கவே முடியாது. வீட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்சனையை சமாளிக்க இதை மட்டும் பண்ணுங்க!

perumal
- Advertisement -

பொதுவாகவே ஒருவருடைய வீட்டில் பிரச்சனை எதனால் ஆரம்பிக்கின்றது என்று சற்று சிந்தித்துப் பார்த்தால், திருமணம் நடந்து முடிந்த பின்பு, மாமியார் மருமகள் சண்டை தான் தீர்க்கவே முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் இன்றைய சூழ்நிலையில் மாமியார் எதை செய்தாலும், அது மருமகள் கண்ணுக்கு தவறாகத்தான் தெரிகின்றது. மருமகள் என்ன செய்தாலும் அது மாமியாரின் கண்களுக்கு தவறாகத்தான் தெரிகின்றது. இதிலிருந்து விடுபட சுலபமான ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women8

யாருடைய ஜாதக கட்டத்தில், சுக்கிரன் வலுவாக இல்லையோ அவர்கள் மாமியாராக இருந்தாலும், மருமகளாக இருந்தாலும் நிச்சயம் பிரச்சினை வரத்தான் செய்யும். சுக்கிரனை சரி செய்யக்கூடிய உலோகம் வெள்ளி. இந்த வெள்ளியால் செய்யப்பட்ட சங்கிலியை வாங்கி மாமியாரும் அணிந்து கொள்ளலாம். மருமகளும் அணிந்து கொள்ளலாம். இப்படி வெள்ளி சங்கிலியை, மாமியார், மருமகள் கழுத்தில் அணிந்து கொண்டாள் வீட்டில் வரக்கூடிய பிரச்சனை கட்டாயம் குறையும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பத்மாவதி தாயாரை தொடர்ந்து வழிபடவேண்டும். பெருமாளின் துணைவியான பத்மாவதி தாயாரின், திருவுருவப் படத்தை உங்களுடைய வீட்டில் வைத்து தினந்தோறும் பூஜை செய்து வரலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்வது, வாசனை நிறைந்த புஷ்பங்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற வழிபாட்டினை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நிச்சயம் உங்களுக்கு குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

women9

சில பேர் வீடுகளில் திருமாங்கல்யத்தில் இதற்காகத் தான், திருமாங்கல்ய குண்டுகளை, வெள்ளி சங்கிலியில் கோர்த்து, தங்க சரடோடு இணைத்து, மாங்கல்யம் அணிந்திருப்பார்கள். இதற்கு காரணமும் மாமியார் மருமகள் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகத் தான், சில வீடுகளில் இப்படிப்பட்ட பழக்கம் இருக்கும். உங்களுடைய வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தால் முடிந்தவரை மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரு வெள்ளிச் சங்கிலி வாங்கித்தான் போட்டு பாருங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் சந்தோஷம் தான்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல், நாம் எவ்வளவுதான் பரிகாரங்கள் செய்தாலும், குடும்பத்தில் பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமென்றால், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ பேர் வீட்டில் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அம்மாக்கள் விரதம் இருப்பார்கள். கோவில் கோவிலாக போய் இறைவனை வழிபாடு செய்வார்கள்.

silver-chain

ஆனால், மகன் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மருமகளை விட்டுக்கொடுத்து முடிந்தவரை அனுசரித்து செல்ல வேண்டும் என்று மட்டும் மறந்து விடுவார்கள். இதே போல் தான் மருமகள்களும், ‘மாமியாரைபற்றி குறை கூறுவதை விட்டுவிட்டு’, நம்முடைய பிறந்த வீட்டில் எப்படி சுகபோகமாக வளர்ந்து இருந்தாலும் சரி, புகுந்த வீட்டிற்கு சென்ற பின்பு மாமியாருக்கு மரியாதை கொடுத்து, மாமியார் சொல்வதைக் கேட்டு, அனுசரித்து நடக்க வேண்டும் என்பதையும், தன்னுடைய கணவருக்காக தன்னுடைய கணவரின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, விட்டுக் கொடுத்து, நடந்து கொண்டாலே வீட்டில் பிரச்சனை வராது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எந்த பொருளை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால், பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்! அது எந்தப் பொருள்? அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -