எந்த பொருளை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால், பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்! அது எந்தப் பொருள்? அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்.

money-lakshmi

முதலில், நம் கைக்கு வரக்கூடிய பணத்தை மொத்தமாக சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கும், மங்களகரமான விஷயங்களுக்கும் பணம் கட்டாயம் செலவு செய்யப்பட வேண்டும். பணம் என்பது வீண் விரையம் மட்டும்தான் ஆகக்கூடாது. மற்றபடி நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கு பணத்தை சரியான முறையில், கட்டாயம் செலவு செய்தே ஆகவேண்டும். செலவு செய்யத்தான் பணமே தவிர, கட்டு கட்டி மூட்டையில் வைத்துக்கொள்வதற்காக அல்ல. அதற்காக சேமிப்பு இருக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. சிறு தொகை என்பது சேமிப்பில் இருக்க வேண்டும். செலவே செய்யாமல், கஞ்சத்தனம் செய்து எடுத்து வைக்கக்கூடிய பணம், கட்டாயம் வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

money

பணத்தை வைத்து, எந்த பொருளை அதிகமாக வாங்கினால் நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வாசத்திற்கு மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக குடி இருப்பாள். மகாலட்சுமிக்கு பிடித்தமான லவங்க வாசனைதான் அது. கிராம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா, இந்த கிராம்பை மாதம்தோறும் மளிகைச் ஜாமானோடு சேர்த்து வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகப்படியான கிராம்பை பணம் கொடுத்து வாங்குவதன் மூலம் உங்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. அதன் மூலம் அதிகப்படியான லாபம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

இந்த கிராம்பை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்ப்பாள். உங்கள் வீட்டில் தினந்தோறும் தீபமேற்றும் பழக்கம் கட்டாயம் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் எத்தனை தீபத்தை ஏற்றிகிறீர்களோ, அத்தனை விலங்குகளிலும், நல்லெண்ணெயில் இரண்டு கிராம்பை போட வேண்டும்.

krambu

காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, குபேரர் விளக்கு இப்படி உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய எல்லா வகையான விளக்கிலும், நல்லெண்ணையில் இரண்டு கிராம்பு சேர்ப்பது, தீபம் ஏற்றினால் அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை அதிகரித்து தரும். அதாவது அந்த கிராம்பு நல்லெண்ணெயில் ஊற ஆரம்பிக்கும். அந்த தீபம் எரியும் போது கிராம்பின் லேசான வாசனை நம் வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும். இந்தக் கிராம்பின் வாசனைக்கு கட்டாயம் எதிர்மறை ஆற்றலானது விலக்கப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு மகாலட்சுமி நிரந்தரமாக நம் வீட்டில் குடி கொள்ள இது ஒரு நல்ல வழிபாட்டு முறையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களால் அந்த கிராம்புகளை விலக்கில் போட்டு தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து இருப்பீர்கள் அல்லவா? அந்த பாட்டிலுக்குள் நான்கைந்து கிராம்பை போட்டு வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. அந்த எண்ணெயை ஊற்றி தினம்தோறும் தீபம் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

deepam

உங்களுடைய வீட்டில் மண் அகல் தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, வீட்டு பூஜை அறையில் சிறிய மண் அகல் தீபத்தை வைத்து, அதில் இரண்டு கிராம்புகளை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு நிற விளக்கு திரி கடைகளில் விற்கிறது, அதை வாங்கி தீபத்தில் போட்டு தீபம் ஏற்றுவது மேலும் பணவரவை தரும்.

vilaku

இரண்டு கிராம்பை எடுத்து நீங்கள் காசு சேமித்து வைத்திருக்கும் உண்டியல், டப்பா, பர்ஸ், பீரோ, தங்க நகைகள் வைத்திருக்கும் பெட்டி, வீட்டின் அலமாரிகளில் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு கிராம்பை திறந்தபடி வைக்கலாம். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். 11 கிராம்புகளை நூலில் மாலையாக கட்டி பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு மாலையாகப் போட்டு வைக்கலாம். மற்றொரு 11 கிராம்புகளை கட்டி நில வாசப்படியில் ஆணியில் மாட்டி வைக்கலாம். இந்த கிராம்புகளை எல்லாம் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும்.

இப்படியாக கிராம்பை நம்முடைய வீட்டில் அதிகமான புழக்கத்திற்கு கொண்டு வரலாம். கிராம்பு வாங்குவதற்கு 100 ரூபாய் செலவு செய்வதில் எந்த ஒரு தவறும் கிடைககயாது. நீங்கள் கிராம்பு வாங்க செலவு செய்யும் பணத்திற்கு, 10 மடங்கு அதிகப்படியான லாபம் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய வீட்டிலும் தீபம் ஏற்றும்போது நல்லெண்ணையில் இரண்டு கிராம்பை போட்டு ஏற்றி தான் பாருங்களேன்! எல்லோருடைய வீட்டிலும் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் தினந்தோறும் பூஜை செய்யும்போது, மணியடித்து சாமி கும்பிட்டால் வேண்டுதல் பளிக்காதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.