13/12/2021 கார்த்திகை மாத கடைசி சோமவார விரதத்தில் சிவபெருமானுக்கு இந்த விளக்கு ஏற்றினால் தீராத துன்பம் எல்லாம் நிச்சயம் தீருமாம்!

vilva-maram
- Advertisement -

கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சோமவார விரதம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்நாளில் செய்யக்கூடிய ஒவ்வொரு இறை வழிபாடும் மிகுந்த பலன்களை கொடுக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவ வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் பிலவ வருடம் கார்த்திகை மாதம் ஆன இன்று கடைசி சோமவாரத்தில் சிவபெருமானுக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் தீராத துன்பம் எல்லாம் தீர்வாக நம்பப்படுகிறது. அது என்ன தீபம்? என்பதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sivan-god2

தீரா துன்பங்கள் தீர பரமேஸ்வரனை வணங்குவது விசேஷமாக கருதப்படுகிறது. அந்த வகையில் வில்வ இலைகள் கிடைத்தால் கட்டாயம் அதனை வாங்கிக் கொள்ளுங்கள். கார்த்திகை மாதம் மட்டும் அல்லாமல் நீங்கள் ஒவ்வொரு திங்கட் கிழமை அன்றும் சிவலிங்கத்திற்கு வீட்டில் வில்வ அர்ச்சனை செய்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ என்கிற மந்திரத்தை உச்சரித்து வந்தால் உங்களுக்கு எந்த விதமான பகைவர்கள் தொல்லையையும், கஷ்டங்களும் நெருங்கவே செய்யாது.

- Advertisement -

கார்த்திகை மாதம் கடைசி சோமவார விரதத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. மேலும் பூஜைக்கு உரிய அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். பால், தயிர், பன்னீர் போன்ற முக்கிய பொருட்களை நீங்கள் இந்த நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வாங்கி கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எவ்வளவு வேண்டுதல்கள் இருந்தாலும் அது நிச்சயம் பலிக்கும்.

மேலும் வீட்டில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணி வரையிலான காலகட்டத்தில் சிவலிங்கம் அல்லது சிவனுடைய படத்தை வைத்து அதற்கு வில்வ இலை அல்லது மணமிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். சிவபெருமானுக்கும், சங்கு வழிபாட்டிற்கும் நிறையவே தொடர்பு உண்டு எனவே சங்கு வைத்திருப்பவர்கள் சங்கு வழிபாடு செய்வது விசேஷமானது. சங்கை தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் பால், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து மஞ்சள், குங்கும திலகமிட்டு குங்கும அர்ச்சனை செய்யலாம்.

- Advertisement -

மேலும் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு சிறிய அளவிலான செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டில் இருக்கும் நீங்கள் சாப்பாடு செய்யும் பச்சரிசியில் இருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு போட்டுக் கொள்ளுங்கள். கட்டாயம் பச்சரிசியை தவிர வேறு எந்த அரிசியையும் உபயோகிக்கக்கூடாது. எந்த விதமான பரிகாரத்திற்கும் பச்சரிசி மிகவும் உகந்தது ஆகும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

பின்னர் அதன் மீது வில்வ இலைகள் இருந்தால் வில்வ இலைகளை வையுங்கள். அப்படி இல்லை என்றால் வெற்றிலையை சுத்தம் செய்து வைக்கலாம். வெற்றிலையின் காம்பு பகுதியானது சிவபெருமானை நோக்கியும், நுனி பகுதியானது உங்களை நோக்கியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன். மீது ஒரு சுத்தமான அகல் விளக்கு வைத்து கொஞ்சம் நெய்விட்டு, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் 108 சிவ நாமாவளிகளை உச்சரித்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வில்வத்தை அல்லது பச்சை கற்பூரம் கலந்த தீர்த்தத்தை ஜோதியை சுற்றிலும் விட்டு விட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -