- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசோமவார பிரதோஷம் நந்தி தேவர் வழிபாடு

சோமவார பிரதோஷம் நந்தி தேவர் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் செய்த பாவங்கள் நீங்க, செய்த பாவங்களால் நமக்கு வந்திருக்கும் கஷ்டங்கள் நீங்க, செய்ய வேண்டிய எளிமையான நந்தி தேவர் வழிபாட்டை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாளைய தினம் சோமவார பிரதோஷம். ஈசன் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு நந்தி தேவரையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

நந்தி தேவர் மனது வைத்தால் தான், சிவபெருமானை பார்ப்பதற்கு நமக்கு அனுமதி கிடைக்கும். ஆக நாளை தினம், நாம் முதலில் நந்தி தேவரை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நந்தி தேவர் வழிபாடு

சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயர் உண்டு. நந்தி தேவருக்கு ரொம்ப ரொம்ப பிரியமானவர் என்றால் அவர் இந்த ருத்ரன் தான்.  ஆகவே நந்தி தேவரை ருத்ர ப்ரியன் என்றும் சொல்லுவார்கள். ‘ருத்’ என்றால் துக்கம். ‘ரன்’ என்றால் நீங்குவது. துக்கத்தை நீக்கக்கூடிய வேலையை செய்பவர் இந்த ருத்ரமூர்த்தி. நாளைய தினம் சிவன் கோவிலில் அமர்ந்து ‘ஓம் ருத்திரப்பிரியனே போற்றி’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்கான மன்னிப்பை வழங்க வேண்டும் என்று நந்தி தேவரிடம் பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். நந்தி தேவர் செவிகளில் அருகில் சென்று உங்களுடைய பிரார்த்தனையை சொல்லுங்கள். நந்திதேவரை தொடக்கூடாது. தொடாத படி அவருடைய செவிகளுக்கு பக்கத்தில் சென்று உங்களுடைய வேண்டுதலை சொன்னீர்கள் என்றால், நீங்கள் சொன்ன அந்த ஒரு வேண்டுதல் நிச்சயம் அடுத்த பிரதோஷ தினத்திற்குள் பலிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இந்த பிரதோஷ நேரத்தில் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு காளை மாட்டிற்கு, உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அகத்திக்கீரை, வாழைப்பழம், வைக்கோல், எள்ளு புண்ணாக்கு, இப்படிப்பட்ட பொருட்களை மாடுகளை பராமரிப்பவர்கள் கையில் நீங்கள் கொடுத்துவிட்டால் கூட போதும்.

இதையும் படிக்கலாமே: பணமும் நகையும் பல மடங்கு பெருக பரிகாரம்

அதை அவர்கள் பசுக்களுக்கு அல்லது காளை மாட்டிற்கு தேவையான போது கொடுத்து பசியாற செய்வார்கள். இப்படி நாளைய தினம் நீங்கள் வாயில்லா ஜீவனுக்கு செய்யக்கூடிய தானம், உங்களுடைய பாவத்தை குறைக்கும். நாளைய தினம் நீங்கள் செய்யும் இந்த எளிமையான வழிபாடு உங்கள் கஷ்டங்களை உடனடியாக தீர்க்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்