சோமவாரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு.

somavaram
- Advertisement -

சிவன், முருகன், ஐயப்பன் என்று அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாதமாக திகழக் கூடியது கார்த்திகை மாதம். அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதம் சோமவாரம் என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சோமவாரத்தன்று செய்யவேண்டிய எளிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சோமவாரம் என்று கூறப்படுவது என்று திங்கட்கிழமையை தான் கூறுவோம். அதுவும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் நாம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக இந்த சோமவார விரதத்தை பார்வதி அம்மன் மேற்கொண்டு சிவபெருமானுடன் இணைந்தார் என்பதால் சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவார். திருமணமானவர்கள் விரதம் இருந்து வழிபட்டால் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்.

- Advertisement -

திங்கட்கிழமை அன்று விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்டு விட்டு சிவபெருமானிடம் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் சிவாலயம் சென்று சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து விரதத்தை விட வேண்டும்.

இந்த சோமவார நாளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் நந்தியம் பெருமானுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி குடும்பம் நிம்மதியுடனும், அமைதியுடனும் இருக்கும்.

- Advertisement -

மேலும் அன்றைய தினம் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக பசும் பால் வாங்கி தர வேண்டும். இவ்வாறு தந்து விட்டு நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானுக்கு தேங்காய் உடைத்து தேங்காய் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு அந்த தேங்காயில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் அவரின் ஆதிக்க காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களும் சங்கடங்களும் குறையும்.

மேலும் கண்டிப்பான முறையில் சிவாலயங்களில் தலவிருட்சம் என்று இருக்கும். அந்த தல விருட்சத்தை வழிபட வேண்டும். அதிலும் குறிப்பாக வன்னி மரம் அல்லது வில்வ மரம் இருந்தால் அதற்கு நெய் தீபம் ஏற்றி 21 முறை சுற்றி வந்து வழிபட நம் மனதில் இருக்கக்கூடிய குறைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே: துளசி கல்யாணம் வழிபாட்டு முறை.

வாராவாரம் சோமவார விரதம் இருக்க முடியாதவர்கள் கூட கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஏதாவது ஒரு சோமவாரத்திலாவது மேற் சொன்னபடி சிவபெருமானை வழிபட்டு அவரின் அருளால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களை பெறலாம்.

- Advertisement -