சகல நன்மைகள் தரும் சோமவார வழிபாட்டு முறை

soma vara viratham
- Advertisement -

இந்த உலகத்தை காத்து ரட்சிக்கக்கூடிய கடவுளுள் ஒருவராக திகழ்பவர் தான் சிவபெருமான். சிவபெருமானை நினைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது அவர் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் அற்புத கடவுளாக திகழ்கிறார். இவ்வளவு அற்புதங்களை செய்யக்கூடிய சிவபெருமானை நினைத்து நாம் எந்த முறையில் சோமவார விரதம் இருந்தால் நம் வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானுக்குரிய விரதங்கள் பல இருக்கின்றன. முக்கியமான விரதங்களாக பிரதோஷ விரதம், சோமவார விரதம், சிவராத்திரி விரதம் என்று கூறலாம். பிரதோஷ தினத்தன்று இருக்கக்கூடிய விரதத்தை பிரதோஷ விரதம் என்றும் மகா சிவராத்திரி அன்று இருக்கக்கூடிய விரதத்தை சிவராத்திரி விரதம் என்றும் கூறுவோம். இதேபோல் திங்கட்கிழமை தோறும் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார விரதம் என்று கூறுவோம்.

- Advertisement -

பொதுவாக சோமவார விரதம் இருப்பவர்களுடைய மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றுதான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் இதே சோமவார விரதத்தை நாம் முறையாக மேற்கொண்டோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதோடு நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி நல்ல சுகமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் முக்தி அடையும் பலனையும் நம்மால் தர முடியும்.

சோமவார விரதம் இருக்கும் முறை

பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சோமவாரம் என்பது மிகவும் விசேஷமான விரதமாக திகழக்கூடியது இருப்பினும் நாம் சாதாரணமாக மற்ற பிற மாதங்களில் வரக்கூடிய சோம தினத்தன்று விரதத்தை மேற்கொள்ளலாம். வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திங்கட்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அவருடைய படத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைத்து அவருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து சிவபெருமானுக்குரிய பாடல்களை பாடலாம். பாடல்கள் தெரியாதவர்கள் “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்படி உச்சரித்த பிறகு அன்றைய தினம் முழுவதும் அவரை நினைத்து உபவாசம் இருக்க வேண்டும். அன்றைய தினம் மாலையில் பிரதோஷ வேளையில் அதாவது 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் சுத்தமான நெய்யை ஊற்றி அதில் கோதுமை மாவை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடித்த வெல்லத்தை கலந்து சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

சிவபெருமானுக்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி வைத்து அவருக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும் வகையில் கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். நாம் நெய்வேத்தியம் வைத்த கோதுமை மாவை அருகில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக வழங்கிவிட்டு நாமும் அதை உண்டு நம்முடைய விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் தொடர்ந்து 16 வாரங்கள் யார் ஒருவர் சோமவார விதத்தை மேற்கொள்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டங்கள் படிப்படியாக நீங்க ஆரம்பித்து சுகமான வாழ்க்கையை பெறுவார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் கடைசி காலத்தில் அவர்கள் மோட்சத்தை அடையவும் சிவபெருமான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க அமாவாசை அன்று ஏற்ற வேண்டிய தீபம்

கணவன் மனைவி ஒன்று சேர்வதற்காக மட்டுமல்லாமல், நோய்கள் தீரவும், கடன் பிரச்சினைகள் நீங்கவும், குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் போக என்று பல பிரச்சினைகளுக்கும் இந்த சோமவார விரதம் நல்ல தீர்வாக அமையும்.

- Advertisement -