பித்ரு தோஷம் நீங்க அமாவாசை அன்று ஏற்ற வேண்டிய தீபம்

tharpanam deepam
- Advertisement -

வருடத்தில் வரக்கூடிய 12 அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒன்று ஆடி மாதத்தில் வரக் கூடிய அமாவாசை மற்றொன்று மகாளய அமாவாசை என்று சொல்லப்படும் பெரிய அமாவாசை. இது புரட்டாசி மாதத்தில் வரும். அடுத்து இந்த தை மாதம் அமாவாசை.
பிற அமாவாசைகளில் முன்னோர்களை வழிபடத் தவறியவர்கள் கூட, இந்த அமாவாசை தினத்தில் கட்டாயமாக முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும்.

அத்தகைய முக்கியமான இந்த  நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்துடன் இந்த ஒரு தீபத்தை ஏற்றும் போது நம்முடைய சகல விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பித்ரு தோஷம் நீங்க தீபம்

இப்போதெல்லாம் அமாவாசை திதி கொடுப்பதை பெரும்பாலானோர் ஒரு வேலையாகவே நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு செயலாக கருதப்படுகிறது. முன்னோர் வழிபாட்டை சரியாக செய்யாத குடும்பத்தில் முன்னேற்றம் என்பதே இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி முன்னோர்களை முறையாக வழிபடாத குடும்பங்களில் கடன் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரிய தடை, குழந்தை பேரு இல்லாத நிலை போன்றவைகளை தொடர்ந்து சந்தித்து கொண்டு இருப்பார்கள். பித்ருக்களின் அனுமதிகள் இல்லாத பட்சத்தில் குலதெய்வம் கூட அருள் புரியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நம்முடைய வளமான வாழ்க்கைக்கு முன்னோர்கள் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களை அனைத்து அமாவாசை தினங்களிலும் வணங்கி யாரேனும் ஒருவருக்கு உணவு தானம் செய்து வந்தால் முன்னோர் ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும் என்பது ஐதீகம். அத்துடன் சேர்த்து இந்த தீபத்தையும் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த தீபத்தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை முதல் மதியம் 12 மணிக்குள்ளாக அரச மரத்தடியில்  ஏற்ற வேண்டும். ஏனெனில் சகல தெய்வங்களும் வாசம் செய்யும் இடமாக அரச மரம் கருதப்படுகிறது. ஆகையால் முன்னோர் உடைய அருளை பெற இந்த தீபத்தையும் அரச மரத்தடியில் தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்ற  ஒரு அகல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை நீங்கள் ஆலயத்தில் இருக்கும் அரச மரத்தடியிலும் ஏற்றலாம் தவறு ஒன்றும் இல்லை. இதை ஆண் பெண் இருவரும் ஏற்றலாம். தர்ப்பணத்தை ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் பெண்கள் கொடுக்கக் கூடாது என்பது போன்ற எந்த ஐதீகமும் இந்த தீபத்திற்கு கிடையாது.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை வாரி வழங்கும் லட்சுமி குபேரர் வழிபாடு

இந்த ஒரு தீபம் நமக்கு முன்னோரின் ஆசிர்வாதத்தை முழுவதுமாக பெற்று தரும் என்பதோடு, தெய்வ அனுகிரகத்தையும் முழுதாக கிடைக்க செய்யும். இதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய கடன் தொல்லை பண பிரச்சனை போன்றவை நீங்குவதோடு பித்ரு தோஷம் இருந்தால் அதுவும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது .நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -