இந்த 21 நாளில் வீடு கட்டும் யோகத்தை தரும் சக்தி வாய்ந்த விரதம்! நினைத்ததை நடத்திக் காட்டும் இந்த விரதத்தை மேற்கொள்வது இவ்வளவு சுலபமா?

home-chandran-sivan
- Advertisement -

பொதுவாக விரதம் என்றாலே மிகவும் கஷ்டப்பட்டு தன் உடலை வருத்திக் கொண்டு செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். ஆனால் அதிசக்தி வாய்ந்த இந்த சிவ விரதம் மேற்கொள்வதற்கு அவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. விரதம் என்பது நாம் மனதார மேற்கொள்வது ஆகும். முழு ஈடுபாட்டுடன் மனதால் செய்யும் இந்த சுலபமான விரதம் 21 திங்கட் கிழமைகளில் உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் சக்தி படைத்துள்ளது. அது என்ன விரதம்? எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்கிற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

‘சோம’ என்கிற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. சோமன் என்றால் சந்திரன் என்கிற பொருளும், திங்கள் என்கிற பொருளும் உண்டு. திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்கு உகந்த ஒரு கிழமை ஆகும். திங்கட்கிழமையில் தெரியாமல் கூட நீங்கள் சிவபெருமானை வழிபட்டாலும் அதற்குரிய பலன்கள் உங்களை வந்தடையும் என்று புராணங்கள் கூறுகிறது. சோமன் என்கிற சந்திரன் வளர்ந்து தேயும் என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.

- Advertisement -

இப்படி விநாயகரிடம் சாபம் பெற்று முழுமையாக தேயும் பொழுது சிவன் தன்னுடைய சிரத்தில் இடம் கொடுத்து சந்திரனை தங்க சொல்லி வரம் கொடுத்தார். சிவனின் சிரத்தில் இருக்கும் சந்திரனால் சிவபெருமானுக்கு சோமநாதன் என்கிற சிறப்புப் பெயர் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த சோமநாதனுக்கு உகந்த திங்கட்கிழமை ஆகிய நாளில் 21 வாரங்கள் தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் இருந்து சந்திரனை தரிசித்து சிவ பெருமானை வணங்கினால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது ஐதீகம்.

தேய்கின்ற வேண்டுதல்களை தேய்பிறை திங்கட் கிழமையிலும், வளர்கின்ற வேண்டுதல்களை வளர்பிறை திங்கட்கிழமையிலும் துவங்க வேண்டும் என்பது நியதி. அதாவது தீராத பிணிகள் தீர வேண்டும், நம் கஷ்டங்கள் குறைய வேண்டும் என்கிற தேய்ந்து போக வேண்டிய வேண்டுதல்களை வைக்கும் பொழுது தேய்பிறை திங்கட்கிழமையில் இந்த விரதத்தை தொடங்க வேண்டும். செல்வம் சேர வேண்டும், வீடு கட்ட வேண்டும், திருமணம் கைகூடி வர வேண்டும் என்பது போன்ற வளர்ந்து வரக்கூடிய விஷயங்களை வேண்டும் பொழுது வளர்பிறை திங்கட்கிழமை அன்று இந்த விரதத்தை துவங்க வேண்டும்.

- Advertisement -

விரதம் துவங்கிய நாளன்று அதிகாலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். உங்கள் உடல் நிலைக்கு தகுந்தவாறு விரதம் மேற்கொள்ளலாம்! நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், சாப்பிடவில்லை என்றால் எனக்கு தலை சுற்றி விடும் என்று கூறுபவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் அவல், பால், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்ட பின்னர் விரதத்தைத் தொடரலாம்.

அன்றைய நாளில் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம். உங்களால் சிவபெருமானுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை செய்து படைக்கலாம். மேலும் இந்நாளில் சிவ ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதும், ‘நமச்சிவாய’ என்கிற மந்திரத்தை சொல்வதும் நல்ல பலன்களைக் கொடுக்கும். மாலையில் சந்திரன் வந்ததும் சந்திரனை தரிசித்து விட்டு சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்துவிட்டு கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும். தானம் செய்வது என்பது இந்த விரதத்தில் மிகவும் முக்கியமானது.

நீங்கள் எதற்காக வேண்டி இருக்கிறீர்களோ, அதற்கேற்ப தான, தர்மங்களையும் செய்ய வேண்டும். உங்களுடைய தீராத பிணிகள் தீர்வதற்காக இந்த விரதம் மேற்கொண்டால் ஒவ்வொரு வாரம் நீங்கள் விரதத்தன்று பூஜைகள் நிறைவு செய்த பின்பு நோயுற்றவர்களுக்கு அல்லது மருத்துவமனைக்கு சென்று உதவிகள் புரியலாம். அதே போல ஒருமித்த தம்பதிகளாக வாழ வேண்டும், சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற வேண்டுதலை வைத்து நீங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பூஜைகள் முடிந்த பின்னர் வயதான தம்பதியரை அழைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது அல்லது வஸ்திர தானம் செய்வது என்று உங்களால் முடிந்த தானங்களை செய்யலாம்.

இப்படி 21 திங்கட் கிழமைகளில் உங்கள் வேண்டுதல்களை இப்படி விரதம் மேற்கொண்டு வைத்து தான, தர்மங்களை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் பாதியில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை தம்பதியினருக்கு உதவி செய்யலாம். சக்தி வாய்ந்த இந்த சோமவார விரதத்தை இங்கனம் மேற்கொண்டு அனைவரும் பயன் பெறலாமே!

- Advertisement -