சொட்டை விழுந்த தலையில் கூட முடியை வளர செய்யும் சோம்பு. 7 நாட்களில் புதிய முடி வளர்ச்சியை கண்கூடாக காணலாம்.

hair19
- Advertisement -

சமீபகாலமாக எனக்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளது. முடி கொட்டிய இடங்களில் வழுக்கை தெரிய ஆரம்பித்துவிட்டது. அந்த வழுக்கையில் முடி வளர வேண்டும் என்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக அதிவிரைவாக முடி உதிர்ந்த இடத்தில் முடி வளர தொடங்கிவிடும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வழுக்கை இருக்கிறது. அந்த இடத்தில் முடி வளர வேண்டும் என்றால் இந்த எண்ணெயைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தி வர நல்ல ரிசல்டை கொடுக்கும். வாங்க சமையலறையில் இருக்கக்கூடிய சோப்பை வைத்து தலை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, தலை முடியை எப்படி வளரச் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

முதலில் 1 டேபிள்ஸ்பூன் அளவு சோம்பை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக பொடித்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சுத்தமான தேங்காய் எண்ணெய் நமக்கு தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் பொடித்து வைத்திருக்கும் 1 டேபிள்ஸ்பூன் சோம்பு போட்டுக்கொள்ள வேண்டும். இந்த சோம்பு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதாவது 25ml தேங்காய் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் சோம்புக்கு சரியாக இருக்கும். (கிண்ணத்தில் சோம்பும் தேங்காய் எண்ணெயும் அப்படியே இருக்கட்டும்.)

- Advertisement -

அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக சூடு செய்து விடுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். சுடு தண்ணீரை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த சூடு தண்ணீரின் மேலே, சோம்பு எண்ணெய் கிண்ணத்தை எடுத்து வைத்து, சூடு செய்ய வேண்டும்.

அதாவது  டபுள் பாய்லிங் மெத்தட் தான். ஆனால் அடுப்பின் மேலே வைத்து சூடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சுடு தண்ணீரின் மேலே சோப்பு எண்ணெயை 5 நிமிடங்கள் வைத்து சூடு செய்ய வேண்டும்.

- Advertisement -

தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடு வந்ததும், இதை ஒரு ஃபில்டரில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான சோம்பு எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தொட்டு உங்களுடைய மயிர் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். எப்போதும் தேங்காய் எண்ணெய் வைப்பது போல கூட இந்த எண்ணையை தலையில் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக வழுக்கை விழுந்த இடத்தில் இந்த எண்ணெயை தேய்த்து விடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

எண்ணெயை வைத்துவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருப்பினும் நீங்கள் வெளியே செல்ல வேண்டும் தலையில் சோம்பு வாசனை அடிக்கும் என்பவர்கள் தலைக்குக் குளித்து விடலாம். அதாவது எண்ணெயை தலையில் இரண்டு மணிநேரம் ஊறிய பின்பு தலைக்கு குளித்து விடலாம். அப்படி இல்லை என்றால் இரவில் இந்த எண்ணெயை தலையில் வைத்துக் கொண்டு மறுநாள் காலை எழுந்து தலைக்கு குளிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள். முடி வளராத இடத்தில் கூட முடியை வளரச் செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -