சொந்த வீடு கட்டும் முன் இவற்றை மட்டும் சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத பிரச்சனைகளும் வந்து சேரும்

sondha veedu
- Advertisement -

வீடு கட்டுவதற்கு முன்னர் ஒரு சிலர் வீட்டை எந்த முறையில் கட்ட வேண்டும் என்பதற்கான வாஸ்துவை பார்த்த பிறகுதான் கட்ட ஆரம்பிப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் வாழ்நாளில் எந்த வித அசுப காரியமும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் ஒரு சிலர் இவற்றையெல்லாம் யோசிக்காமல் தனக்கு மட்டும் பிடித்தால் போதும், என்பதற்கு ஏற்ப அவர்களுக்கு உரிய யோசனையில் வீட்டை கட்டி முடித்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இப்படி செய்வது சரியாக அமைவதில்லை. ஏனென்றால் ஒரு சிலரின் ஜாதகத்தைப் பொறுத்தும், அவர்களின் நட்சத்திரத்தைப் பொறுத்தும் எந்த திசையில் வாசல் வைப்பது, எந்த திசையில் வீட்டின் அமைப்பை சரியாக அமைக்க வேண்டும் என்பதெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை சரியாக அமைத்துக் கொண்டால் நீங்கள் வாழும் வீடு எப்பொழுதும் உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டும்தான் அள்ளித்தரும். வாருங்கள் எப்படி சிறந்த வாஸ்து சாஸ்திரத்தின்படி வீடு கட்ட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வாஸ்து சாஸ்திரத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு இப்படி எட்டு வித திசைகளை பொருத்து தான் வாஸ்து சாஸ்திரம் கணிக்கப்படுகிறது. நிலம் எந்த வடிவத்தில் இருந்தால், அதாவது சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ இப்படி இரண்டு வடிவத்தில் ஏதேனும் ஒரு வடிவத்தில் அமைந்துவிட்டால் மிகவும் நன்மையாக இருக்கிறது.

- Advertisement -

வீடு கட்டும் பொழுது தெற்கு, மேற்கு, தென்மேற்கு, திசைகளில் கட்டிடம் உயர்ந்து காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசைகளில் கட்டிடம் சற்றுத் தாழ்வாக இருப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும். அதே போல் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் வீட்டின் அலமாரிகள் அமைவதும் மிகவும் சிறப்புடன் இருக்கும்.

பெரும்பாலும் கிழக்கு பார்த்த திசையில் வீட்டின் வாசல்படி அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் கிழக்கு திசையில்தான் இந்திரன் வாசம் செய்கிறார். எனவே எப்பொழுதும் கடவுளின் நல்லாசி உங்கள் வீட்டில் நிறைந்திருக்கும். அவ்வாறு கிழக்கு திசையில் சூரியன் உதிப்பது அதிக நேரம் சூரிய ஒளி நமது வீட்டின் வாசலில் விழும். இவ்வாறு அமைவது எப்பொழுதும் சிறப்பு பலன்களைக் கொடுக்கிறது.

- Advertisement -

மேற்கு திசையில் வீட்டின் வாசல் அமைந்தால் மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்கள் கிடைக்கிறது இந்த திசையில் வருணபகவான் இருப்பதால் எப்போதும் நன்மை மட்டுமே நடக்கும் மேஷ ராசியில் உள்ளவர்களுக்கு மேற்கு திசை பார்த்த வாசல் அமைந்த வீடு மிகவும் நற்பலனை கொடுக்கிறது

வடக்கு திசை நோக்கி வீட்டின் வாசல் அமைவது எப்பொழுதும் வற்றாத செல்வத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் இந்த திசையில்தான் குபேரர் இருக்கிறார். எனவே குபேரரின் ஆசியும், அருளும் எப்பொழுதும் நமது வீட்டுக்குள் நிலைத்துக் கொண்டிருக்கும். தெற்கு திசையில் எப்பொழுதும் வீட்டின் வாசலை பெரும்பாலும் அமைப்பதில்லை. ஏனென்றால் இந்த திசையில் தான் எமன் இருக்கிறார்.

- Advertisement -