- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு கட்ட குலதெய்வ பரிகாரம்

சொந்த வீடு கட்ட குலதெய்வ பரிகாரம்

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்பதற்காக எவ்வளவு போராட்டங்களை நடத்திப் பார்க்கின்றோம். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை. பணம் காசு இருந்து, சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் சில பேர். சொந்த வீடு கட்ட ஒரு ரூபாய்க்கு கூட சேமிப்பில் இல்லை. இருந்தாலும் சொந்த வீடு கட்டி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் பல பேர். இதில் நீங்கள் எந்த பட்டியலில் இருந்தாலும் சரி. உங்களுக்கு இந்த பரிகாரம் கை கொடுக்கும். நம்பிக்கையோடு பின் சொல்லக்கூடிய விஷயங்களை குலதெய்வ கோவிலில் செய்து பாருங்கள்.

முதலில் உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமா? பெண் தெய்வமா? அந்த குலதெய்வத்திற்கு உரிய கிழமை என்ன என்பதை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களுடைய குலதெய்வத்திற்கு உரியக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வது பல மடங்கு பலனைத் தரும்.

- Advertisement -

பரிகாரம்

ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிற துணியை மஞ்சளில் நனைத்த உலர வைத்து, மஞ்சள் நிற துணியை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் சின்னதாக படிகார கல் ஒன்று, ஒரு பித்தளை நாணயம், பெரிய கட்டி பச்சை கற்பூரம், வைத்து இதை முடிச்சாக கட்டி குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். குலதெய்வத்துடைய கோபம், குலதெய்வத்திற்கு முன்னோர்கள் செய்யாத நேர்த்திக் கடன் ஏதாவது இருந்தால் எங்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்று குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். இது முதல் பரிகாரம்.

அதற்குப் பிறகு குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும். மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன வீடு உங்களுக்கு தேவை. குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் குல வழக்கப்படி, குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்தோ அல்லது அபிஷேகம் செய்தோ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறகு இந்த மரத்தால் செய்யப்பட்ட வீட்டை குலதெய்வ கோவிலில் வைக்க வேண்டும்.

- Advertisement -

எங்கள் குடும்பம் எங்கள் முன்னோர்கள் யாராவது ஏதேனும் அறியாமல் தவறு செய்திருந்தால், அதை மன்னித்து விடுங்கள். எங்களுக்கு சொந்த வீடு கட்டும் பாக்கியத்தை கொடு, குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி இந்த வேண்டுதலை வைத்து, மர வீட்டை குலதெய்வ கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு வரவேண்டும். மரத்தடியில் வைக்கலாம், அல்லது நூல் போட்டு மரத்தில் கட்டி விட்டு கூட வரலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த பிரார்த்தனையை செய்து கொண்டு வீடு திரும்புங்கள். பூஜை அறையில் நீங்கள் முடிந்து வைத்த அந்த படிகார முடிச்சு அப்படியே இருக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்துவிட்டு வீடு கட்டுவதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். சொந்தமாக நிலம் வாங்குவது, பேங்கில் லோன் போடுவது, அல்லது பணம் சம்பாதிக்க முயற்சிகளை மேற்கொள்வது, இதுபோல வீடு கட்ட என்னனென்ன முயற்சிகள் தேவையோ, அதை எல்லாம் மேற்கொள்ளுங்கள். சீக்கிரமாக சொந்த வீடு கட்டும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். மூன்று மாதத்தில் துவங்கிய உங்கள் முயற்சி நிச்சயம் மூன்று வருடத்திலாவது நிறைவேறிவிடும். உங்களோடு சேர்ந்து அந்த குல தெய்வமும் வீடு கட்ட தேவையான வேலைகளை பார்த்துக் கொள்ளும்.

- Advertisement -

இப்போது சொந்த வீடு கட்டி முடித்து விட்டீர்கள். என்ன செய்வது. கிரகப்பிரவேசமும் முடிந்துவிட்டது. என்ன செய்வது. பூஜை அறையில் வைத்திருக்கும் அந்த மஞ்சள் முடிச்சை கொண்டு போய் குலதெய்வ உண்டியலில் போட்டுவிட்டு, குலதெய்வத்திற்கு பட்டுப்புடவை அல்லது பட்டு வேட்டி வாங்கி மாலை போட்டு உங்களால் முடிந்தால் அபிஷேகமோ அல்லது உங்களால் முடிந்த விஷயத்தை குலதெய்வத்திற்கு செய்துவிட்டு திரும்புங்கள்.

இதையும் படிக்கலாமே: சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட பரிகாரம்

குலதெய்வத்திற்கு நீங்கள் நன்றி தெரிவித்துவிட்டு வீடு திரும்ப வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும். சொந்த வீடு கட்டும் பாக்கியமும் சீக்கிரம் கிடைக்கும், என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்