சொந்த பந்தங்களை பார்க்க செல்லும் போது அவர்களுடைய வீட்டிற்கு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு செல்லவே கூடாது. உறவுகள் உடைந்து போய்விடும்.

family
- Advertisement -

அப்படி என்னங்க அந்த ஒரு பொருள். உடனே சொல்லுங்கள். தெரிஞ்சுகிட்டு எனக்கு பிடிக்காத சொந்தக்காரங்க வீட்டுக்கு அந்த பொருளை வாங்கி கொண்டு போய், அவங்க உறவை கழட்டி விட்டு வந்து விடலாம். என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீங்க. நிறைய பேர் இன்னைக்கு இப்படித்தான் யோசிக்கிறோம். நமக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலை. அந்த சூழ்நிலையில் உடனடியாக உதவ வேண்டும் என்றால் அது நம்முடைய உறவினர்களும் நண்பர்களும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தான். ஒருவரால் இந்த பூமியில் தன்னிச்சையாக நின்று நிச்சயமாக வாழ்ந்துவிட முடியாது.

indian-family

ஆக முடிந்தவரை உறவுகளோடு நண்பர்களோடு விட்டுக்கொடுத்து சுமூகமான உறவை வைத்துக் கொள்ளப் பாருங்கள். சரி விஷயத்திற்கு வருவோம். பெரும்பாலும் நம்முடைய வழக்கப்படி நம்முடைய உறவினர்கள் வீட்டிற்கு அல்லது நண்பருடைய வீட்டிற்கு செல்வதாக இருந்தால் வெறும் கையை வீசிக் கொண்டு செல்ல மாட்டோம். நிச்சயமாக அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கி எடுத்து செல்வோம்.

- Advertisement -

அந்தப் பொருட்களில் கசப்பு சுவை நிறைந்த பொருட்களை வாங்கி செல்ல மாட்டோம். இது நிறைய பேருக்கு தெரியும். அடுத்தபடியாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் உறவினர்கள் வீட்டிற்கு நாம் செல்லும்போது புளிப்பு சுவை மிகுந்த பொருட்களையும் வாங்கிச் செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. நிறைய பழங்கள் புளிப்பு சுவையை கொண்டதாக உள்ளது. அந்த பழவகைகளை கூட உறவினர்களுக்கு வாங்கிக் கொண்டு போய் கொடுக்க கூடாது.

jackfruit-palapalam

எடுத்துக்காட்டிற்கு புளிப்பாக இருக்கக்கூடிய ஆரஞ்சு பழம், புளிப்பாக இருக்கக்கூடிய திராட்சை பழம், இப்படிப்பட்ட பொருட்களை உறவினர்கள் வீட்டிற்கு வாங்கி கொண்டு போக கூடாது. இப்படிப் புளிப்பான பொருட்களை நாம் கொடுப்பதன் மூலம் நம்முடைய உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேபோல் சில பழங்கள் மேலே பார்ப்பதற்கு முள்போல இருக்கும். அந்த பழங்களை உறவினர்களுக்கு வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தால் உறவுகளும் கரடுமுரடாக முள் போல குத்த ஆரம்பித்து விடும் என்று சொல்லுவார்கள். அன்னாசி பழம், பலாப்பழம் போன்ற பழங்களை உறவினர்களுக்கு வாங்கி வாங்கிக் கொடுக்கக் கூடாது.

graps2

சிலபேர் தன்னுடைய உறவுகளுக்கு தன்னுடைய நண்பர்களுக்கு பிடித்தமான பொருளைவாங்கிக் கொண்டு போய் கொடுப்பார்கள். அந்தப் பட்டியலில் புளிப்பு நிறைந்த பொருட்கள் இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது.

- Advertisement -

froot3

உதாரணத்திற்கு நீங்கள் திருமணமாகி மாமியார் வீட்டில் இருக்கிறீர்கள். உங்களுடைய அம்மா வீட்டிற்கு செல்கிறீர்கள். அதாவது புகுந்த வீட்டில் இருக்கும் ஊரில் இருந்து பிறந்த வீட்டிற்கு செல்கிறார்கள். உங்கள் அம்மாவுக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் ஊரில் பலாபழம் மலிவாக கிடைக்கின்றது. நீங்கள் அம்மா வீட்டிற்கு செல்லும்போது ஒரு பெரிய பலாப்பழத்தை வாங்கி செல்கிறார்கள். இதை கொண்டு போய் உங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வேண்டும் என்றால் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

family2

ரொம்ப ரொம்ப நெருங்கிய உறவினர்கள் இடத்தில் இப்படி நிலைமையை சொல்லி பணம் வாங்குவதும் தவறு கிடையாது. ஆனால், உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்களுக்கு இப்படிப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களிடம் பணம் வாங்க முடியாது அல்லவா. அது நாகரீகமான விஷயமும் அல்ல.

family

அதனால் முடிந்தவரை புளிப்பு நிறைந்த கசப்பு நிறைந்த, பொருட்களை சொந்த பந்தங்களுக்கு வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். சாஸ்திரம் சொல்வதை பின்பற்றி நடக்கும் பட்சத்தில் நமக்கு கெடுதல் எதுவும் வரப்போவது கிடையாது. பின்பற்றித் தான் பார்ப்போமே. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -