சூரிய கிரகண தோஷம் பரிகாரம், கிரகண நேரம் 2022

sooriya-grahanam dosham pariharam tamil
- Advertisement -

கிரகண தோஷம் நீங்க பரிகாரம் 2022

சூரிய கிரகணம் என்பது ஒரு வலிமையான இயற்கை நிகழ்வாக நமது பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இன்று ஏற்படவிருக்கும் என்று சூரிய கிரகணத்தால் 12 ராசிகளில் எந்தெந்த ராசிகளுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் என்பதையும், அந்த பலன்கள் நீங்க அந்த ராசியினர் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் ராசி:

இன்று ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது ரிஷப ராசியினருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு ஏற்கனவே உடலில் இருக்கின்ற நோய் பாதிப்புகள் தீவிரமடையும். மனதில் குழப்பமான நிலையும், பதட்ட தன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் சிரமங்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

சூரிய கிரகண ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் குறைய ரிஷப ராசியினர் சூரிய கிரகணத்தின் போது மகா கணபதி மந்திரம் பாராயணம் செய்ய வேண்டும். சூரிய கிரகணம் முடிந்த பிறகு பருவமடையாத பெண் குழந்தைகளுக்கு வளையல்களை தானம் அளிக்கலாம்.

மிதுனம் ராசி:

மிதுனம் ராசியினருக்கு இன்று ஏற்படவிருக்கின்ற சூரிய கிரகணத்தால், அவர்களின் வாழ்வில் பல எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். உறவுகளுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். சிலருக்கு தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் ஏற்படாமல் போகும் சூழல் ஏற்படும். குறிப்பாக மிதுன ராசியினர் இன்றைய தினம் பிறருக்கு கடன் கொடுப்பதையும், பிறரிடம் கடன் வாங்குவதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

மிதுன ராசியினர் சூரிய கிரகண தோஷ பாதிப்புகள் நீங்க சூரிய கிரகணத்தின் பொழுது தொடங்கி வரக்கூடிய எல்லா நாட்களிலும் விஷ்ணு சகஸ்ர நாமா மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அம்மந்திரத்தை முழுவதும் பாராயணம் செய்ய முடியாதவர்கள் அதை ஒலி வடிவிலான பாடலாக வீட்டில் ஒலிக்க விட வேண்டும்.

கன்னி ராசி கிரகண தோஷம் நீங்க பரிகாரம்:

கன்னி ராசியினருக்கு இன்று ஏற்படுகின்ற சூரிய கிரகணம் பெரிய நன்மைகளை கொடுக்காது. முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை இந்த ராசியினர் தவிர்க்க வேண்டும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நெருங்கிய உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த சூரிய கிரகணம் வழிவகுக்கும்.

- Advertisement -

கன்னி ராசியினர் சூரிய கிரகணத்தால் ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் நீங்க கிரகணம் முடிந்ததும் ஒரு காளை மாட்டிற்கு வெல்லம் கலந்த அரிசியை உணவாக கொடுக்க வேண்டும். மேலும் உங்களால் இயலும் பட்சத்தில் ஏழை மக்களுக்கு கோதுமை தானியங்களை தானமாக அளிக்கலாம்.

துலாம் ராசி:

இன்று ஏற்பட இருக்கின்ற சூரிய கிரகணத்தின் பொழுது சூரிய பகவான் துலாம் ராசியில் இருப்பதால் மற்ற ராசியினர் காட்டிலும் துலாம் ராசியினருக்கு அதிக பாதகமான பலன்கள் ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. சூரிய கிரகணம் ஏற்படும் இன்றைய தினத்தில் துலாம் ராசியினர் சில விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடலாம். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் முடிவு எட்டப்படாமல் நீண்டு செல்லக்கூடிய நிலை உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் சொந்த வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கக்கூடும். சிலருக்கு மருத்துவ ரீதியிலான வீண் விரயங்கள் ஏற்படும்.

சூரிய கிரகண தோஷ பாதிப்புகள் நீங்க துலாம் ராசியினர் சூரிய கிரகணம் நிகழ்கின்ற சமயம் துர்க்கை அம்மனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு சிவப்பு நிறத்தில் இருக்கின்ற தானியங்களை பிறருக்கு தானம் அளிக்க வேண்டும்.

தனுசு ராசி கிரகண தோஷம் நீங்க பரிகாரம்:

தனுசு ராசியினர் இன்று ஏற்படவிருக்கின்ற சூரிய கிரகணத்தால் பொருளாதார ரீதியில் சில இறக்கங்களை சந்திக்க நேரிடும். இன்றைய தினம் பிறருக்கு பிணை கையெழுத்து போடுவது, கடன் கொடுப்பது போன்ற செயல்களை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். சிலருக்கு உடல் நிலை ரீதியான பாதிப்புகள் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

சூரிய கிரகணத்தால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கி நன்மை பெற தனுசு ராசியினர் சூரிய கிரகணம் முடிந்ததும் நன்கு குளித்து முடித்து விட்டு, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்குரிய மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு பச்சைநிற காய்கறிகள் மற்றும் பசலைக்கீரையை தானம் வழங்க வேண்டும்.

சூரிய கிரகணம் 2022 நேரம் இன்று

இன்று ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்த ரஷ்யா, மத்திய ஆசியா, மற்றும் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காண முடியும் என உலக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக இல்லாமல், பகுதி சூரிய கிரகணமாகவே மக்களால் பார்க்க முடியும் எனவும் கூறப்படுகின்றது. இந்திய நேரப்படி இன்று மாலை சரியாக 4.29 மணிக்கு தொடங்கி மாலை 5.42 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -