சூரிய கிரகணம் 2022 எப்போது, கிரகணம் நேரம், பரிகாரம்

grahan 2022 time tamil
- Advertisement -

சூரிய கிரகணம் 2022 அக்டோபர்

பொதுவாக சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கக் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது. நமது பண்டைய சாஸ்திரங்களில் சூரிய கிரகணம் குறித்து பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக சூரிய கிரகணத்தின் பொழுது பூமியில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்தும், அதனால் உயிர்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளனர். அந்த வகையில் நாளை ஏற்படக்கூடிய சூரிய கிரகணத்தின் பொழுது நாம் என்னன்னவற்றை செய்வதால், நம்மை சூரிய கிரகண தோஷங்கள் அண்டாமல் காத்துக் கொள்ள முடியும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புராணப்படி கிரகணம் ஏற்பட காரணம் என்ன?

இந்து மத புராணங்களின்படி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து, உண்பவருக்கு இறவா நிலையை கொடுக்கும் அமுதத்தை எடுத்த பொழுது தேவர்களும், அசுரர்களும் தங்களுக்குள் சரிபாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒப்புக்கொண்டனர். எனினும் அசுரர்கள் பலம் பெற்று விட கூடாது என்பதற்காக திருமால், மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்கள் இடம் கொண்டு வந்து சேர்த்து, தேவர்கள் அனைவரும் இறவா நிலை பெறுமாறு செய்தார் என்றும்.

- Advertisement -

அசுரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி வருந்தினாலும், அசுரர் கூட்டத்தில் இருந்த பாம்பு வடிவம் கொண்ட “சுவர்ணபானு” எனும் அசுரன், தேவர் போன்ற தோற்றத்தை கொண்டு, தேவர்கள் கூட்டத்தில் அமர்ந்து அமுதத்தை சாப்பிட்டான் எனவும். இதை கண்ட சூரியன் மற்றும் சந்திரன், சுவர்ணபானு ஒரு அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்ததாகவும். உடனே திருமால் தனது சக்கராயுதத்தை செலுத்த, அது சொர்ண பானுவை துண்டுகளாக வெட்டியது என்றும், எனினும் இறவா வரம் தரும் அமிர்தத்தை சுவர்ணபானு அருந்தியதால் அவன் இறக்கவில்லை என்றும், மேலும் இரு துண்டுகளாக இருந்த பாம்பின் வடிவம் கொண்ட சுவர்ணபானுன் உடலில் தலை பகுதி “ராகு” எனும் கிரகமாகவும், உடற்பகுதி “கேது” எனும் கிரகமாகவும் மாறியதாக கருதப்படுகின்றது.

தன்னை திருமாலிடம் காட்டிக் கொடுத்த சூரியன் மற்றும் சந்திர கிரகங்களை பழிவாங்க பாம்பின் வடிவம் கொண்ட இந்த ராகு மற்றும் கேது கிரகங்கள் சூரிய, சந்திர கிரகங்களை விழுங்கும் காலமே சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என கருதப்படுவதாக இந்து மதமட்டுமல்லாது, பௌத்த மத புராணங்களும் கூறுகின்றன.

- Advertisement -

சூரிய கிரகணம் 2022 நேரம் | Surya grahan 2022 time Tamil

இந்திய நேரப்படி அக்டோபர் 25 ஆம் தேதி பிற்பகல் 4 மணி 29 நிமிடம் முதல் 5 மணி 42 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.

கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது:

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது ஏற்படுவதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. பொதுவாக சூரிய கிரகணத்தின் பொழுது பூமியில் ஏற்படுகின்ற நிழல் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டதாக கருதப்படுகின்றது. எனவே சூரிய கிரகணம் ஏற்படுகின்ற பொழுது கீழ்க்கண்டவற்றை கடைபிடித்தால் அந்த கிரகண தோஷங்கள் நம்மை அணுகாமல் காக்கிறது.

- Advertisement -

கிரகணத்தின் போது செய்ய கூடாதவை

சூரிய கிரகணம் ஏற்பட்டு அது முடியும் வரையில் வீட்டில் இருப்பவர்கள் எந்த வகை உணவுப் பொருட்களை உண்பதோ அல்லது பானங்களை அருந்தவோ கூடாது.

சூரிய கிரகணம் தொடங்குவதற்கு முன்பாகவே உங்கள் வீட்டில் நீங்கள் பருகுவதற்கு வைத்திருக்கும் தண்ணீரில் ஒரு தர்ப்பைப் புல் அல்லது சில துளசி இலைகளை போட்டு வைக்கவேண்டும். கிரகணம் முடிந்த பிறகு இந்த நீரை நீங்கள் பருகினால் சூரிய கிரகண எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

சூரிய கிரகண காலம் என்பது நல்ல விடயங்கள் செய்வதற்கு தகுதியற்ற காலமாக சாஸ்திரங்கள் கருதுகின்றன. எனினும் சூரிய கிரகண வேளையில் மந்திர உபாசனை செய்வதாலும், தியானத்தில் ஈடுபடுவதாலும் நாம் என்ன விரும்புகிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்பது ஆன்றோர்களின் வாக்காக உள்ளது.

கிரகணம் முடிந்த பிறகு செய்யவேண்டியவை

சூரிய கிரகணம் முடிந்ததும் ஒரு பக்கெட் அளவு தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து, அந்த தண்ணீரை கொண்டு உங்கள் வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

நீங்களும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஏற்கனவே குளித்து முடித்திருந்தாலும், சூரிய கிரகணம் முடிந்த பின்பு மீண்டும் குளியலை மேற்கொண்டு, உடுத்தியிருந்த துணிகளைத் துவைத்து காய வைக்க வேண்டும்.

கிரகணம் முடிந்த பிறகு உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கின்ற பூக்கள் மற்றும் காய்கறி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி அவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

பசு, நாய், பூனை மற்றும் பறவைகளுக்கு உண்ண உணவும், அருந்த தண்ணீரும் வைப்பது சூரிய கிரகணத்தின் பொழுது ஏற்பட்ட தோஷங்களின் தாக்கத்தை குறைக்க உதவும் ஒரு சிறந்த பரிகாரமாக கூறப்பட்டுள்ளது.

சூரிய கிரகண காலங்களில் பிறருக்கு தானங்கள் கொடுப்பது சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தானங்கள் கொடுக்க விரும்புகிறவர்கள் கிரகத்திற்கு முன்பாக கொடுப்பது சிறப்பு. கிரகணத்திற்கு முன்பாக கொடுக்க முடியாதவர்கள், கிரகணம் முடிந்த பிறகு தங்களை தூய்மைப்படுத்திக் கொண்ட பிறகு பிறருக்கு தானங்கள் அளிக்கலாம்.

கிரகண தோஷம் பரிகாரம் | Grahan dosha pariharam in Tamil

கிரகணம் முடிந்ததும் கோயிலில் இருக்கும் அர்ச்சகர்கள், வேதமோதும் பிராமணர்கள் போன்றோருக்கு அரிசி காய்கறிகள் போன்றவற்றையும், வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு கருப்பு நிற காலணிகளை தானம் அளிப்பதாலும் கிரகண காலத்தில் படக்கூடிய தோஷங்களை போக்கக்கூடிய சிறந்த பரிகாரமாக திகழ்கிறது.

கிரகணம் முடிந்த பிறகு மீண்டும் புதிதாக ஏதேனும் ஒரு நைவேத்திய உணவை உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் தெய்வத்திற்கு படைத்து, காயத்ரி மந்திரங்கள் அல்லது சிவபெருமானுக்குரிய மகா மந்திர பாராயணம் செய்வது சிறப்பு. இறைவனுக்குரிய மந்திர பாராயணம் முடிந்த பிறகே எந்த வகை உணவு உண்பதையும், பானம் அருந்துதலையும் மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நாளை கிரணத்துடன் கூடி வரும் ஐப்பசி அமாவாசை. எதை எல்லாம் எப்படி செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.

அக்டோபர் 25 அன்று ஏற்படுகின்ற சூரிய கிரகணத்தின் பொழுது மேற்சொன்னவற்றை கடைப்பிடிப்பதால் நவக்கிரகங்களில் மிகவும் வலிமையானவர்கள் என கருதப்படும் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் அருட்கடாட்சம் கிடைத்து வாழ்வில் கெடு பலன்கள், குறைந்து நற்பலன்கள் அதிகம் உண்டாகும்.

- Advertisement -