நாளை கிரணத்துடன் கூடி வரும் ஐப்பசி அமாவாசை. எதை எல்லாம் எப்படி செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.

amavasai
- Advertisement -

பொதுவாக ஐப்பசி மாதத்தில் தீபாவளி தினத்திலோ அல்லது தீபாவளிக்கு மறுதினம் அமாவாசை திதி வருகின்றது. தமிழ் மாதங்களில் இருக்கின்ற 12 மாதங்களில் வருகின்ற மற்ற எந்த அமாவாசை தினங்களை காட்டிலும் ஐப்பசி மாசம் வருகின்ற அமாவாசை தினம் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு அமாவாசை தினமாக கருதப்படுகின்றது. அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும், அப்படி செய்வதால் நமக்கு ஏற்படக்கூடிய ஆன்மீக ரீதியான பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அமாவாசை தினத்தில் நாம் சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்வதன் மூலமாக மறைந்த நமது முன்னோர்களின் அருளாசிகளையும், நம் குலத்தை காக்கின்ற குலதெய்வத்தின் அருளையும் பெறுவதோடு நமக்கு பிறகு வரும் நம் சந்ததியினருக்கும் வளமான வாழ்க்கை அமைய வழி வகுக்கும்.

- Advertisement -

ஐப்பசி மாத அமாவாசை திதி, தீபாவளித் திருநாளான அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய நேரப்படி சரியாக மாலை 5.27 மணிக்கு தொடங்கி அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:18 மணி வரை நீடிக்கின்றது. எனவே இந்த அமாவாசை தினத்தில் அனைவரும் உடல் மற்றும் மனத் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் தங்கள் குலத்தின் மறைந்த முன்னோர்களுக்கு முறைப்படி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அமாவாசை தினத்தில் எக்காரணம் கொண்டும் புலால் உணவுகளை உண்ணக்கூடாது. மேலும் அன்றைய தினம் மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவற்றையும் செய்யக்கூடாது. இதனால் நமது மறைந்த முன்னோர்களின் சாபத்தை நாம் பெறுவதோடு, நம் குலத்தை காக்கின்ற குலதெய்வங்களின் சாபங்களையும் நாம் ஒருசேரப் பெற்று பலவிதமான கஷ்டங்களை நாமும், நமது பரம்பரையினரும் அனுபவிக்க நேரிடும் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.

- Advertisement -

இந்த ஐப்பசி அமாவாசை தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, அந்த கோயில் வளாகத்திலேயே அமர்ந்து, “ஓம் நமசிவாய” எனும் மந்திரத்தை 108 முறை ஜபம் செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டு பூஜையறையில் அமர்ந்து சிவ மந்திரத்தை மேற்சொன்ன எண்ணிக்கையில் துதிக்கலாம்.

அமாவாசை தினத்தில் ஆதரவற்றோர்களுக்கும், வயதானவர்களுக்கும் உங்களால் முடிந்த சேவைகளை செய்வதால் மறைந்த உங்களின் பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களால், உங்கள் பரம்பரைக்கு இடப்பட்ட குல சாபங்களின் ஆற்றல் குறைந்து, அவர்களின் ஆசிகள் கிடைத்து தங்களையும் மற்றும் தங்களின் பரம்பரையையும் சிறப்பாக வாழச் செய்யும்.

- Advertisement -

ஐப்பசி அமாவாசை தினத்தன்று ஏழ்மையான நிலையில் இருக்கின்ற மக்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், வெல்லம், பசும்பால் போன்றவற்றை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கும்.

அமாவாசை தினத்தன்று காலை உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கின்ற “காளி” அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். “காளி” அம்மனை வழிபாடு செய்வதால் அமாவாசை தினத்தன்று நம்மையறியாமல் நாம் செய்யக்கூடிய தவறுகளால் ஏற்படக்கூடிய அமாவாசை தோஷம் நம்மை பீடிக்காது.

இதையும் படிக்கலாமே: ரொம்ப நாள் வீடு கட்ட முடியாத நிலத்தில் வீடு கட்ட, இந்த 1 பொருளை கொண்டு போய் நிலத்தில் தூவி விடுங்கள்.

அக்டோபர் 25 ஆம் தேதி ஐப்பசி அமாவாசை திதி தினத்திலேயே சூரிய கிரகணம் ஏற்பட இருப்பதால் அந்த சூரிய கிரகண நேரத்திற்கு முன்பாகவே மேற்சொன்ன பரிகாரங்களை செய்துவிட வேண்டும் இதனால் நமக்கு மட்டுமல்லாமல் நம்முடைய சந்ததியினருக்கும் அனைத்து விதமான நற்பலன்கள் நிறைந்த வாழ்வு அமையும் என்பது நிச்சயம்.

- Advertisement -