உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா ?

Astrology Sun

உலகிற்கு ஒளியையும் உயிராற்றலையும் தருபவர் சூரிய பகவான் ஆவார். ஜோதிட சாத்திரத்தில் இந்த சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கு காரகனாகிறார். மேலும் ஒரு ஜாதகரின் உடலமைப்பு, கம்பீரத்தன்மை, பிறர் மதிக்ககூடிய நிலை, உயர்பதவி போன்றவற்றையும் தீர்மானிக்கக்கூடியவராக இருக்கிறார். ஜாதக கட்டத்தில் சூரியனின் உச்ச வீடாக “மேஷ” ராசியும், சொந்த வீடாக “சிம்ம” ராசியும், நீச்ச வீடாக “துலாம்” ராசியும் வருகிறது. இந்த ராசிகளில் சூரியன் இருந்தால் என்னென்னெ பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

Rasi Kattam
ராசி கட்டம்

சூரியன் உச்சம் பலன்

சூரியனின் உச்ச ராசி மேஷம் ஆகும். ஒரு நபருக்கு அவரது ஜாதகத்தில் இந்த மேஷ ராசியில் சூரியன் இருக்க அந்த நபர் திடகாத்திரமான உடலை பெற்றிருப்பார். அவரது உடல், நடை, தோற்றத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். எதற்கும் அஞ்சாத மனதை கொண்டிருப்பார். சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். மேஷம் என்பது போர்க்கிரகமான “செவ்வாயின்” வீடாகும். அதில் வெப்பமான சூரியன் உச்சம் பெறுவதால் சண்டை பிரியர்களாக இருப்பார்கள். அது வாய்ச்சண்டையாகவும், அடிதடி சண்டையாகவும் இருக்கலாம். பெரும்பாலும் நியாயமான காரணங்களுக்காகவே சண்டையிடுவார்கள். அதில் ஈடுபட்ட பின்பு அவ்வளவு சுலபத்தில் பின்வாங்க மாட்டார்கள். ராணுவம், காவல் துறை போன்ற பணிகளில் சேர்ந்து வீர சாகசங்கள் அதிகம் புரியும் நபர்களாக இருப்பார்கள்.

சூரியன் சொந்த வீடு பலன்

ஜாதகத்தில் சூரியனின் சொந்த ராசியான சிம்மத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர் சிங்கத்தை போன்ற அஞ்சாத குணமும், அதை போன்ற ஒரு கம்பீரத்தையும் கொண்டிருப்பார். இவர்களில் பெரும்பாலானவர்களின் குரல்வளம் மிகவும் கடுமையாகவும், பிறரை அச்சமூட்டி அவர்கள் மீது ஒரு ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் இருக்கும். கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அதில் உச்சத்தை தொடும் யோகமுண்டு. அரசியலில் ஈடுபடும்போது மிகவுயர்ந்த பதவிகளை பெறும் வாய்ப்பு உண்டாகும். சமுதாயத்தில் உள்ள அனைவரின் மதிப்பு மரியாதைக்கும் உரியவர்களாவார்கள். தந்தைக்கு பெருமை சேர்க்கக்கூடிய மகனாக இருப்பார்கள்.

astrology

சூரியன் நீச்சம் பலன்

துலாம் ராசி சூரியனின் நீச்ச ராசியாகும். இந்த ராசியின் அதிபதி அசுரர்களின் குருவான “சுக்கிர” பகவானாவார். ஜாதகத்தில் இந்த ராசியில் சூரியன் இருப்பவர்களுக்கு மத்திய வயதுகளில் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலாரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். தீய சகவாசங்களால் பல துன்பங்களை சந்திக்க நேரும். பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளையும் சந்திக்க கூடும்.

இதையும் படிக்கலாமே:
சனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்

ஜாதகம் பார்ப்பது எப்படி என்ற பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Suriyan ucham in Tamil, Suriyan neecham in Tamil palangal.