பணம் தங்க, தொழிலில் லாபம் பெற, வாகன சேர்க்கை உண்டாக இந்த ஒரு பூஜையை வீட்டில் செய்தால் போதும். இதை செய்ய இல்லாதவர்கள் இந்த நான்கை தானம் கொடுத்தால் கூட போதுமானது.

Sivan poojai
- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. வேலை கிடைக்க ஒரு பூஜை, பணம் சேர ஓர் பூஜை, தொழில் சிறக்க ஒரு பூஜை இப்படி நமது தேவைக்கு ஏற்ப நாம் பூஜை செய்வோம். ஆனால் நம்முடைய தேவை அனைத்தையும் பூர்த்தி செய்து நமக்கு முக்தியையும் தரவல்ல ஒரு பூஜை இருக்கிறது. இந்த ஒரு பூஜையை செய்தாலே போதும் நமக்கான அனைத்தும் நம்மிடம் வந்து சேரும். அப்படியான ஒரு பூஜை தான் சௌபாக்கிய பூஜை. இந்த பூஜை குறித்து விரிவாக இந்த ஆன்மீக தகவல் பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

அனைத்து விதமான நலன்களையும் பெற்று வாழ்பவர்களை சௌபாக்கியவதி என்று சொல்வார்கள். அதேபோல் தான் அனைத்து நலன்களையும் பெற்றுத்தரக்கூடிய பூஜைக்கு சௌபாக்கிய பூஜை என்று பெயர். இந்த பூஜையை செய்வதன் மூலம், வேலை கிடைக்கும், தொழிலில் லாபம் பெருகும், வீடு, வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும் இப்படி இதன் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த பூஜையை எப்படி செய்யவேண்டும்? இதை வீட்டில் செய்ய இயலாதவர்கள் என்ன செய்யலாம் போன்றவற்றை இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

சௌபாக்கிய பூஜை செய்வது எப்படி?
இந்த பூஜையை செய்வதற்கு நமக்கு சிவலிங்கம், சாளக்கிராமம், ஸ்ரீ மேரு மற்றும் ருத்ராட்சம் தேவைப்படும். இவற்றிற்கு நாம் தினந்தினம் காய்ச்சாத பசும்பாலால் அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து நெய்வேத்தியம் செய்து, கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். இதுவே சௌபாக்கிய பூஜை ஆகும்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுதும், அர்ச்சனை செய்யும் பொழுதும் “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு நாம் உச்சரித்து அபிஷேக அர்ச்சனை செய்யும் பொழுது சிவபெருமான் நமக்கு முக்தி நிலையை அருள்வார்.

- Advertisement -

அடுத்ததாக சாளக்கிராமம், இந்த சாளக்கிராமத்திற்கு அர்ச்சனை செய்யும் பொழுது, நாம் விஷ்ணுவின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அல்லது “ஓம் நமோ நாராயணாய” என்றும் சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற முடியும்.

மூன்றாவதாக ஸ்ரீ மேரு, இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதற்கு நாம் அபிஷேகம் செய்யும்பொழுது மகாலட்சுமியின் மந்திரங்களை உச்சரிக்கலாம். மேலும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை உச்சரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதத்தை நாம் பெறலாம்.

- Advertisement -

நான்காவதாக ருத்ராட்சம், இந்த ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் அர்ச்சனை செய்யும் பொழுது, நாம் சரஸ்வதி தேவியின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிப்பதன் மூலம் சரஸ்வதி தேவியின் பரிபூரண ஆசீர்வாதத்தை நாம் பெறலாம். இந்த பூஜையை நம்மால் தினமும் செய்ய முடியவில்லை என்றால், இந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கி இதனுடன் நந்தி சிலையையும் வாங்கி சிவ பூஜை செய்பவர்களுக்கு தானமாக வழங்கலாம்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி, மகாராணி போல் உங்கள் வீட்டில் வந்து அமர இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும்.

அவ்வாறு வழங்கும் கிழமை வியாழக்கிழமையாக இருப்பது மிகவும் சிறந்தது. அல்லது கோவில்களில் தானம் செய்து அச்சகரிடம் அதற்கு அபிஷேகம் செய்ய சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழலாம்.

- Advertisement -