இனிப்பு போளி மட்டும் சாப்பிட்டு பழகிய நீங்கள், இப்படி காரப்போளியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள், அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்

sweet-tamil
- Advertisement -

கார போளி உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி  செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா பூரணம் செய்து அதனை மைதாமாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி  விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த கார போளியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மைதா மாவு  – 1 கப், உப்பு – 1 ஸ்பூன்,
எண்ணெய்  – 2 ஸ்பூன்,

- Advertisement -

உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய்  – 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, உப்பு – 1  ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  – 2, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 3, மிளகாய் தூள்  – 1 ஸ்பூன், மஞ்சள் தூள்  – 1 ஸ்பூன்,
நெய் – 50 கிராம்.

செய்முறை:
மேல் மாவு செய்வதற்கு ஒரு கப் மைதா மாவு, தேவையான உப்பு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது விட மென்மையாக பிசைந்து கொள்ளவும். அதனை மூடி வைத்து 2  மணி நேரத்திற்கு  ஊறவைக்கவும். உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு ஒரு பானில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பச்சைமிளகாய் வதங்கிய பின்பு  3 உருளைக்கிழங்குகளை வேக வைத்து மசித்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கு மசாலாவை ஆறவைக்கவும். இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்துக் கொள்ளவும். வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை சிறியதாக தட்டவும். அதனுள் ஒரு உருண்டை உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.மேல் மாவை வைத்து மூடவும். மசாலா வெளியே வராமல் நைசாக தட்டிக் கொள்ளவும்.

ஒரு தோசை தவாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள போளியை சேர்க்கவும். ஓரளவு சிவந்த பிறகு திருப்பிப் போட்டு மீண்டும் சிறிதளவு நெய் தடவவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு எடுத்து விடவும். சுவையான கார போளி தயாராகிவிடும். இதான் செவ்வாய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

- Advertisement -