அரிசி மாவில் செய்யக்கூடிய காரசாரமான இந்த கரமுர ஸ்நாக்ஸை ஒரு முறை செய்து வைத்தால் போதும். 10 லிருந்து 15 நாட்களுக்கும் வைத்து சாப்பிடலாம்

thattai2
- Advertisement -

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த உடனே குழந்தைகள் விருப்பமாக சாப்பிட ஏதாவது ஒன்றைக் கேட்டு தொல்லை செய்வார்கள். அந்த நேரத்தில் இது போன்ற தின்பண்டங்களை வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் அவர்கள் கேட்கும் நேரத்தில் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கலாம். அதிலும் இந்த உணவு குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், கிரஸ்ப்பியாகவும் இருக்கும். எனவே அவர்கள் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனை வீட்டில் செய்தது என்று சொன்னாலும் பலரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும், வடிவமும் சூப்பராக இருக்கும். வாரூங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

children-snacks

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், மைதா மாவு – கால் கப், எள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, காய்ந்த மிளகாய் – 5, பச்சைமிளகாய் – 3, சீரகம் – ஒரு ஸ்பூன், பூண்டு – ஐந்து பல், இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவுடன், கால் கப் கோதுமை மாவு சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் எள் சேர்த்து மூன்றையும் கலந்து ஒன்றாக கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கவேண்டும். அதன் பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நான்கு துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும்.

rice

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அறிந்து வைத்துள்ள வெங்காயம், 5 காய்ந்த மிளகாய், 3 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி மற்றும் 5 பல் பூண்டை தோலுரித்து சேர்த்து கொண்டு, இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இந்த விழுதை கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறி விட வேண்டும்.

- Advertisement -

அதன்பின் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவினை 20 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி திரட்டுவது போல மெல்லியதாக திரட்டிக் கொள்ள வேண்டும். இதனை ஏதாவது ஒரு வட்ட வடிவ தட்டை கொண்டு அழகான வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

thattai

பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள ஒவ்வொரு மாவையும் ஒவ்வொன்றாக எண்ணெய்யில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவையும் சேர்க்கும் பொழுது அவை உப்பி மேலே வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஒவ்வொன்றாக திருப்பிப் போட்டு இருபுறமும் நன்றாக வெந்தவுடன் எண்ணெயை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -