முடி உதிர்ந்த இடத்தில் அசுர வேகத்தில் முடியை மீண்டும் வளரச் செய்ய தேங்காய் எண்ணெயோடு இந்த 4 பொருட்களை சேர்த்தாலே போதும்.

hair4
- Advertisement -

முடி உதிர்வது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் அதேசமயம் உதிர்ந்த இடத்தில் முடி மீண்டும் வளர வேண்டும். முடி வளரவில்லை என்றால்தான் பிரச்சனை. முடியின் அடர்த்தி குறைவது. வழுக்கை விழுவது, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம்முடைய தோற்றத்தை அழகாக காண்பிக்க இந்த முடி வளர்ச்சியும் அவசியம் தேவைப்படுகிறது. முடியை உதிரவிடாமல் தடுக்க, முடி உதிர்ந்த இடத்தில் அதி விரைவாக முடி வளர்ச்சியை தூண்ட, தேவையான தேங்காய் எண்ணெயை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த குறிப்புக்கு நமக்கு தேங்காய் எண்ணெயோடு சேர்த்து 5 பொருட்கள் தேவை. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 150ml, சங்குப்பூ நீல கலர் – 20, காய்ந்த ரோஸ்மேரி இலை – 1 ஸ்பூன், ஆரஞ்சு பழத்தோல் காய்ந்தது சிறிய துண்டு – 4, வெங்காயத்தோல் – 1/2 கைப்பிடி அளவு.

- Advertisement -

பூக்கடைகளில் சொல்லி வைத்தால் சங்கு பூ உங்களுக்கு கிடைத்துவிடும். சங்கு பூவை வாங்கி நிழலிலேயே நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரோஸ்மேரி இலை பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழ தோல் பொடியை நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் மேலே இருக்கும் தோலை நிழலிலேயே நன்றாக காய வைத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தோல் எல்லார் வீட்டிலும் இருப்பதுதான். வெங்காயத் தோளிலும் ஈரம் இருக்கக் கூடாது. நாம் சேர்க்கக்கூடிய இந்த 4 பொருட்களுமே டிரையாக தான் இருக்க வேண்டும். ஈரம் இருந்தால் நாம் காய்ச்சும் எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். தயாராக எடுத்து வைத்திருக்கும் சங்குப்பூ, ரோஸ்மேரி இலை, ஆரஞ்சு பழத்தோல், வெங்காயத்தோல் இந்த நான்கு பொருட்களையும் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத்தோல் அரைபடுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை அது கொஞ்சம் பெரிய துண்டுகளாக இருந்தாலும் அதை அப்படியே எண்ணெய் காய்ச்சும் போது போட்டுக் கொள்ளலாம்.

150ml அளவு மரச்செக்கு தேங்காய் எண்ணெய் நிச்சயம் தேவை. தேங்காய் பாலில் இருந்து சில இடங்களில் தேங்காய் எண்ணெய் எடுத்து விற்கப்படுகிறது. கிடைத்தால் அதை கூட வாங்கி குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தயாராக எடுத்து வைத்திருக்கும் எண்ணெயை ஊற்றி 2 நிமிடம் போல லேசாக சூடு செய்து அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து எண்ணெயை சிம்மில் வைத்து 8 லிருந்து 10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். நாம் சேர்த்திருக்க கூடிய பொருட்களின் சத்து அனைத்தும் இந்த எண்ணெயில் இறக்கிய பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.

எண்ணெயை வடிகட்டாமல் ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் நன்றாக ஆற வைக்க வேண்டும். அதன் பின்பு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்தால் இந்த எண்ணெய் 6 லிருந்து 8 மாதம் வரை கூட கெட்டுப் போகாமல் இருக்கும். ஆனால் ஒரு துளி தண்ணீர் கூட பாட்டிலிலோ அல்லது மற்ற பொருட்களிலோ இருக்க கூடாது கவனம் தேவை.

இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? தினமும் எப்போதும் எண்ணெயை தலைக்கு வைப்பது போல இந்த தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வாரம் இரண்டு நாள், முந்தைய நாள் இரவு இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து விட்டு, மறுநாள் காலை தலைக்கு குளித்து விடுவது நல்லது. உங்களுக்கு எப்படி சௌகரியமோ அப்படி இந்த எண்ணெயை தலையில் வைத்துக் கொள்ளுங்கள். சில பேருக்கு இந்த எண்ணெயை தலையில் வைக்கும் போது ஆரம்பத்தில் முடி உதிர்ந்தாலும் போக போக நிச்சயமாக 3 மாதத்தில் முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -