கொட்டோ கொட்டுன்னு முடி கொட்டும் பிரச்சனையை தடுத்து நிறுத்தி, கட்டு கட்டாக முடியை வளர்க்க இந்த 2 பொருள் இருந்தால் போதும். இந்த பேக் போட்டால் சளி கூட பிடிக்காது.

hair
- Advertisement -

வழக்கம்போலவே தான் இன்று நாம் பார்க்கக்கூடிய குறிப்பில் முடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை பயன்படுத்த போகின்றோம். வெந்தயம் போட்டால் எனக்கு சளி பிடிக்குது என்பவர்கள் இந்த குறிப்பை தவறாமல் படிக்க வேண்டும். வெந்தயத்தை அரைத்து தலையில் இப்படி போட்டால் சளி பிடிக்கவே பிடிக்காது. தலைபாரம் வரவே வராது. சளி பிடிக்காமல் இருக்க வெந்தயத்தோடு சேர்க்கக்கூடிய அந்த ரகசிய பொருள் என்ன என்பதை பற்றியும், அதை தலையில் எப்படி போடுவது என்பதை பற்றியும், வெந்தயத்தில் இருக்கும் சிறு சிறு திப்பி, தலைக்கு குளித்த பின்பு தலையில் நிற்காமல் இருக்க தலையை எப்படி அலசுவது என்பதை பற்றிய குறிப்பையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்

முந்தைய நாள் இரவே தேவையான அளவு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முடியின் அளவைப் பொறுத்து வெந்தயத்தை கொஞ்சம் நிறைய தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் என்றால், 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். (வெந்தயம் தண்ணீரில் எட்டு மணி நேரம் ஆவது ஊற வேண்டும்.) ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குறைவாக ஊற்றி அரைக்கும் போது தான் நிறைய வெந்தயம் திப்பி திப்பியாக இருக்கும். அதுவே நிறைய தண்ணீரை ஊற்றி அரைத்தால் பேக் ரொம்பவும் ஸ்மூத்தாக நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

அரைத்த வெந்தயம் இப்போது நம்மிடம் இருக்கிறது. இதில் சேர்க்க வேண்டிய அந்த முக்கியமான ஒரு பொருள் என்ன தெரியுமா. குறிப்பாக இந்த குளிர் காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க சேர்க்கக்கூடிய பொருள் இஞ்சி சாறு தான். வெறுமனே இஞ்சி சாறை தலையில் போடக்கூடாது. இஞ்சியை தோல் சீவி விட்டு, மண் போக கழுவி விட்டு, பொடிசாக துருவி பிழிந்தால் இஞ்சி சாறு கிடைக்கும். தண்ணீர் ஊற்றாமலேயே இஞ்சி சாறு எடுத்துக்கோங்க. இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு, 2 ஸ்பூன் இஞ்சி சாறு சரியான அளவு.

எடுத்த இந்த இஞ்சி சாறை அப்படியே அரைத்து வைத்திருக்கும் வெந்தயத்தோடு சேர்த்து நன்றாக கலந்து இதை தலையில் பேக் போட்டுக்கோங்க. இஞ்சி சாறு சேர்த்திருப்பதால் நிச்சயமாக சளி பிடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. தலையில் 20 நிமிடங்கள் இந்த பேக் ஊறட்டும். ஒரு முறை இந்த பேக்கை போட்டு தலையை அலசும் போதே முடி உதிர்வதில் நல்ல வித்தியாசம் தெரியும். முடி உதிர்வு குறைந்திருக்கும்.

- Advertisement -

பேக் 20 நிமிடம் தலையில் நன்றாக ஊறி இருக்கும். பேக்கை போட்டுவிட்டு தலைக்கு மேல் ஒரு கவரை போட்டுக்கோங்க. அப்பதான் பேக் டிரை ஆகாமல் இருக்கும். குளிக்க செல்லும் போது முதலில் உங்களுடைய தலையில் தண்ணீரை ஊற்றி நன்றாக அலசி விட்டு, உங்கள் கையை வைத்து கசக்க வேண்டும்.

ஷாம்பு சீயக்காய் போட்டு தலையை கசக்கினால் எப்படி கசக்குவிங்க, அதே மாதிரி கசக்கி முதலில். முடியை நன்றாக அலசி விடுங்கள். அப்போது வெந்தயம் முழுமையாக தலைமுடியில் இருந்து நீங்கிவிடும். அதன் பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட்டால் முடி பட்டு போல மாறிவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை மட்டும் போட்டு வந்தால் கூட முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக முடி வளர தொடங்கி விடும். பேக் பிடித்திருக்கிறவங்க ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -