ஓய்விற்கு பிறகு மீண்டும் டி20 யில் களமிறங்கும் இந்திய அதிரடி வீரர்.!

dhoni

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.ஆஸ்திரேலியா அணியுடனான தொடர் முடிந்ததும் இந்திய அணி நியூசிலாந்து செல்ல உள்ளது. அந்த போட்டிக்கான டி 20 அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான மகேந்திர சிங் தோனி இணைந்துள்ளார்.

dhoni 1

சமீபகால டி20 போட்டிகளில் தோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பண்ட் அணியில் இடம் பிடித்து இருந்தார். இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தெரிவித்ததாவது: தோனிக்கு சிறிது ஓய்வு கொடுக்க எண்ணியே அவர் டி 20 போட்டிகளில் இடம் பெறாமல் இருந்தார். அதனால் இப்போது அவரை மீண்டும் அணியில் இணைத்துள்ளோம்.

dhoni 2

அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வருவதால் மீண்டும் அணியில் இடம்பிடித்திருக்கும் தோனி பார்மில் இருக்க அடுத்தடுத்த தொடர்கள் உதவும் என்று கருதுகிறோம். இளம் வீரர்களை அணியில் வைத்திருப்பது அணிக்கு ஆரோக்கியம் என்று தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்